தமிழகத்திற்கு இனி தண்ணீர் கிடையாது: கர்நாடக அரசு திட்டவட்ட முடிவு!
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு இனி தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலை இருப்பதாக என கர்நாடக அரசு அறிக்கையில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
டெல்லியில் காவிரி மேற்பார்வை குழு கூட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து, தனது தரப்பில் அறிக்கையை சமர்பித்த கர்நாக அரசு கூறியிருப்பதாவது,
தமிழகத்திற்கு இது வரை 13 டிஎம்சி அளவு தண்ணீர் காவிரியிலிருந்து திறக்கப்பட்டுள்ளது எனவும், இதன் காரணமாக தங்கள் மாநிலத்தில் உள்ள 4 அணைகளில் 27 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
தங்களுக்கு அடுத்த ஆண்டு யூலை மாதம் வரை 21 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுவதால், காவிரியிலிருந்து தமிழகத்திற்கு இனி தண்ணீர் திறக்கமுடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக கூறியுள்ளது.
மேலும் கர்நாடகாவில் இந்த ஆண்டு மழை 18 சதவீதம் குறைந்த அளவே பெய்துள்ளதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கமுடியாது என தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு இனி தண்ணீர் கிடையாது: கர்நாடக அரசு திட்டவட்ட முடிவு!
Reviewed by Author
on
September 19, 2016
Rating:

No comments:
Post a Comment