பார்வையற்றவர்களுக்கு பேசும் பதக்கங்கள்!
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஒலிம்பிக் போட்டிகளை தொடர்ந்து பாராலிம்பிக் போட்டிகள் மிக சிறப்பாக நடைப்பெற்று வருகின்றது.
மாற்றுத் திறனாளிகளுக்கான சிறந்த ஓர் சந்தர்பத்தையும் இது வழங்கி வருகின்றது.
ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்கள் தங்களது பதக்கங்களை பற்களால் கடிப்பது சதாரணமான விடயம். இதன் மூலம் வீரர்கள் தங்கத்தை சோதனை செய்வதாக கூறப்பட்டு வந்தது.
ஆனால் தற்போதைய பாராலிம்பிக் போட்டிகளில் பார்வையற்ற வீரர்கள் தங்களது பதக்கத்தை காதருகில் கொண்டு செல்வது வழக்கமாக கொண்டிருக்கின்றார்கள். இதற்கான விளக்கம் தற்போது ஒலிம்பிக் சம்மேளத்தினால் விபரிக்கபட்டுள்ளது.
இதன் மூலம் அவர்கள் தங்களின் பதக்கத்தை பார்க்க முடியாவிட்டாலும், அதை கேட்க முடியுமாக உள்ளது.
மேலும் இதற்காக பிரத்யேக முறையில் தயாரிக்கபட்ட வெண்கலப்பதக்கத்தில் 16 இரும்பு குட்டி பந்துகளும் வெள்ளிப்பதக்கத்தில் 20 பந்துகளும், தங்கப்பதக்கத்தில் 28 பந்துக்களம் காணப்படுகின்றது.
இதன்மூலம் சத்தங்கள் கூடிகுறையும் சந்தர்பத்தில் வீரர்கள் பதக்கங்களை கேட்டு அறியலாம் என கூறப்படுகின்றது.
பார்வையற்றவர்களுக்கு பேசும் பதக்கங்கள்!
Reviewed by Author
on
September 18, 2016
Rating:

No comments:
Post a Comment