அண்மைய செய்திகள்

recent
-

தலைவர் பிரபாகரன் படத்துடன் பல்லாயிரம் மக்கள்!!! ஜெ மீது சீமான் ஆவேசம்…


கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படும்போது கட்சியில் புதியதாக சேருபவர்களை வைத்து முதல்வர் ஜெயலலிதா விழா நடத்தியதற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காவிரி பிரச்சனையில் தமிழர்கள் கர்நாடகாவில் தாக்கப்பட்டனர். இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அதிமுகவில் 91,000 பேர் இணையும் விழாவை முதல்வர் ஜெயலலிதா சென்னையில் நேற்று நடத்தியது சர்ச்சையை கிளப்பியது. இந்த சூழலில் இப்படி ஒரு விழா தேவைதானா? என கேள்வி எழுப்பப்பட்டது.

இதனிடையே சென்னையில் இன்று காவிரி நீர் உரிமை மீட்புப் பேரணியை நடத்திய சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், கர்நாடகாவில் அரசின் பாதுகாப்புடன் நின்று தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள்.

அனைத்துக்குமே கடிதம் எழுதுகிற ஜெயலலிதா அம்மையார், இங்குள்ள கன்னடர்கள் தாக்கப்படும் நிலை உருவாகாதா? என கேள்வி கேட்டு கடிதம் எழுதவில்லையே. கட்சியில் புதியதாக சேருபவர்களை வைத்து விழா நடத்துகிறார் இந்த நேரத்தில்…

ஏன் இந்த சிக்கல் தீர்ந்த பின்னர் விழா நடத்தக் கூடாதா? இந்த பிரச்சனையில் சின்ன அறிக்கையை கூட வெளியிடவில்லையே?
இவ்வாறு சீமான் கூறினார்.
தலைவர் பிரபாகரன் படத்துடன் பல்லாயிரம் மக்கள்!!! ஜெ மீது சீமான் ஆவேசம்… Reviewed by NEWMANNAR on September 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.