20 கம்பிகளை வளைத்து உலக சாதனை நிகழ்த்திய இலங்கை இளைஞன்
ஒரு நிமிடத்தில் 20 உருக்குக் கம்பிகளை வாயினால் வளைத்து ஹங்குராங்கெத்த பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தில் பணிப்புரியும் 24 வயதான ஜனக காஞ்சன என்ற இந்த இளைஞர் கொழும்பு முகத்துவாரம் துறைமுகச் சூழலில் உள்ள மகாவலி பயிற்சி நிறுவனத்தில் இன்று இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் விளையாட்டுத்துறை மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இதற்கு முன்னர் ரஷ்ய விளையாட்டு வீரர் ஒருவர் 12 கம்பிகளை வாயினால் வளைத்து உலக சாதனையை நிகழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
20 கம்பிகளை வளைத்து உலக சாதனை நிகழ்த்திய இலங்கை இளைஞன்
Reviewed by Author
on
October 06, 2016
Rating:

No comments:
Post a Comment