அண்மைய செய்திகள்

recent
-

தீபாவளிக்கு புது டிரஸ் இல்ல! 2 குழந்தைகளுடன் விஷம் குடித்த தாய்....


தமிழகத்தில் தீபாவளிக்கு புதிய துணிகள் எடுத்து தராததால் மனமுடைந்த இளம்பெண் தனது 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடி அருகேயுள்ள மல்லகுண்டா அல்லேரியான் பகுதியைச் சேர்ந்த கோபாலின்(விவசாயி) மனைவி ரம்யா (28). இந்த தம்பதிக்கு ஆஷா (5), ஹேமவர்ஷினி (3) என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் ரம்யா தீபாவளி பண்டிகைக்காக தனது கனவரிடம் புதிய ஆடைகளை வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.

ஆனால் இதற்கு கோபால் மறுத்து இப்பொழுது பணம் இல்லை, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

இதனால், இருவருக்கும் தகராறு ஏற்படவே ரம்யா குழந்தைகளுக்காவது புத்தாடை வாங்கி தாருங்கள் என கூறியுள்ளார்.

ஆனால் கோபால் மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதனால் கோபால் கோபமாக வெளியே சென்றுவிட்டார்.

இந்நிலையில், மிகுந்த மன உளைச்சலிலிருந்த ரம்யா தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

தான் இறந்து விட்டால் தனது குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வார்கள் என எண்ணியவர் குழந்தைகளை கொலை செய்ய நினைத்து அவர்களுக்கும் விஷத்தைக் கொடுத்துள்ளார்.

பக்கத்து வீட்டார் ரம்யாவை பார்க்க சென்ற பொழுது ரம்யா மற்றும் குழந்தைகள் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.

இதனை பார்த்த அவர் அக்கம், பக்கத்தினரை அழைத்து ரம்யாவையும், 2 குழந்தைகளையும் மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

தற்போது, மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு 3 பேரும் மாற்றப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திம்மாம்பேட்டை போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீபாவளிக்கு புது டிரஸ் இல்ல! 2 குழந்தைகளுடன் விஷம் குடித்த தாய்.... Reviewed by Author on October 29, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.