அண்மைய செய்திகள்

recent
-

மதங்களை கடந்த மனித நேயத்தை நேசிப்போம் - தீபாவளி வாழ்த்துச்செய்தியில் மஸ்தான் எம்.பி

இன்றைய நாளில் தீபாவளிப்பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமை அடைகின்றேன். அத்துடன் இவ்வாறான சந்தர்ப்பங்களில் சிங்கள, முஸ்லிம் மக்கள் அவர்களது இன்ப துன்பங்களில் பங்கு கொள்வதன் மூலம் ஓர் சகவாழ்வை கட்டியெழுப்ப முடியும் என எதிர்பார்க்கின்றேன்.

மதங்களாலும், இனங்களாலும் நாம் பிரிக்கப்பட்டிருந்தாலும் அவைகளைக்கடந்த மனித நேயத்தை நாம் நேசிக்க பழகிக்கொள்வோம். இனி வரும் காலங்களிலாவது இனவாதமாற்ற, மதவாதமற்ற ஓர் சமூகத்தை கட்டியெழுப்ப இன்றைய நாளில் இந்த பண்டிகைகையை கொண்டாடும் அனைவரும் உறுதி பூணுவோம்.

இன்றைய நாளில் நாட்டில் சிலரால் இந்த பண்டிகையை கொண்டாட முடியாமல் இருக்கின்றது. அவர்களுக்காகவும் நாம் பிரார்த்திப்போம். கடந்த கால கசப்பான உணர்வுகள் நினைவை விட்டு நீங்காமல் இருந்தாலும் அவைகளை இவ்வாறான நாட்களிலாவது கொஞ்சம் ஒதுக்கிவைத்து உறவுகளுடன் மகிழ்ச்சியாக இருக்க பழகிக்கொள்வோம்.

அதேவேளை ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசின்ஹ ஆகியோருடன் இணைந்து இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

கே.காதர் மஸ்தான்.
பாராளுமன்ற உறுப்பினர் (வன்னி மாவட்டம்)
மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்.
(வவுனியா மன்னார் முல்லைத்தீவு)
மதங்களை கடந்த மனித நேயத்தை நேசிப்போம் - தீபாவளி வாழ்த்துச்செய்தியில் மஸ்தான் எம்.பி Reviewed by NEWMANNAR on October 29, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.