எம் மக்களுக்கான வெளிச்சம் நல்லாட்சியில் தென்படுகிறது எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தீபாவளி வாழ்த்து
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வொன்று கிடைக்குமென்ற நம்பிக்கை இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலை வருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள் குடியேற்றம், இந்து மத அலுவல்கள் அமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற தேசிய தீபாவளிப் பண்டிகையில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே சம்பந்தன், மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான நகர்வின் வெளிப்பாடே இத்தகைய தேசிய பண்டிகையாகும். இதனை நாங்கள் நல்லுள்ளத்துடன் வரவேற்கிறோம்.
தற்போதைய நல்லாட்சியில் எம் மக்களுக்கான வெளிச்சம் தென்படத் தொடங்கியிருக்கிறது. அடுத்த முறை தீபாவளிக்கிடையில் இவ்வெளிச்சம் நிரந்தரமானதாக அமையுமென்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது எனவும் இரா.சம்பந்தன் மேலும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க் கட்சித் தலைவரின் எதிர்பார்ப்பு கூடிய சீக்கிரம் நிறைவேறும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது எனத் தெரிவித்தார்.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள் குடியேற்றம், இந்து மத அலுவல்கள் அமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற தேசிய தீபாவளிப் பண்டிகையில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே சம்பந்தன், மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான நகர்வின் வெளிப்பாடே இத்தகைய தேசிய பண்டிகையாகும். இதனை நாங்கள் நல்லுள்ளத்துடன் வரவேற்கிறோம்.
தற்போதைய நல்லாட்சியில் எம் மக்களுக்கான வெளிச்சம் தென்படத் தொடங்கியிருக்கிறது. அடுத்த முறை தீபாவளிக்கிடையில் இவ்வெளிச்சம் நிரந்தரமானதாக அமையுமென்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது எனவும் இரா.சம்பந்தன் மேலும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க் கட்சித் தலைவரின் எதிர்பார்ப்பு கூடிய சீக்கிரம் நிறைவேறும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது எனத் தெரிவித்தார்.
எம் மக்களுக்கான வெளிச்சம் நல்லாட்சியில் தென்படுகிறது எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தீபாவளி வாழ்த்து
Reviewed by NEWMANNAR
on
October 29, 2016
Rating:

No comments:
Post a Comment