காட்டாட்சி ஆகி விட்ட நல்லாட்சி வன்மையாக கண்டிக்கின்றோம் - மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம்.
வன்முறைச் சிந்தனையை வன்னமாக கொண்ட சிங்கள மேட்டிமை வாதிகளிடம் சனநாயகத்தை எதிர்பார்க்க முடியுமா மீண்டும் அரியனை ஏறுகிறது. அரச பயங்கர வாதம் தமிழரைக் கொல்வதில் சிங்களவர்களுக்கு எப்போதும் அலாதிபிரியம் உண்டு. அது சாதுக்கம் தொடக்கம் சட்டத்தை பாதுகாப்பவர் வரை எல்லோர்க்கும் ஒரே மனநிலையுடையவர்கள் தான் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
பல்கலைக்கழக மாணவர்களை நல்லிரவில் நடு விதியில் வைத்து கொலை வெறிதாக்குதல் நடாத்துவதற்கு அவர்கள் என்ன பயங்கரவாதிகளா?
தமிழர் தாயகப்பகுதியில் ஆயுததாரிகளின் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்க்குரிய நல்லாட்சி அரசு எனக் கூறுபவர்களின் நாடகமா?
அண்மையில் முசலி பிரதேச செயளாலர் பிரிவுக்குட்பட்ட அரிப்பிலும் கடற்படையினரின் மிலேச்சத்தனம் கட்டவீழ்த்து விடப்பட்டிருந்தது.
உண்மையான குற்றவாளிகளை கட்டுப்படுத்த தவறும் காவல்த்துறை அப்பாவிகளை பலியெடுப்பதுதான் சட்டத்தின் பாதுகாவலர்களின் பணியா?
யுத்தம் எனும் நெருப்பாற்றில் பல ஆயிரம் உறவுகளை இழந்து ஊசலாடும் எம்மை மேலும் மேலும் படு கொலைக்குள்ளாக்கின்றீர்களே இது தானா பௌத்த தர்மம்.
ஆகவே இந்த மாணவர்களின் திட்டமிட்ட இனப்படு கொலையை கண்டிப்பதுடன் படுகொலைக்குரிய உண்மையான காரணம் கண்டறியப்பட வேண்டும்.
நீதி பாதியாகி நீழுறக்கம் கொள்ளும் வாடிக்கை இதில் மாறுபட்டு நியதியோடு நீதி கிடைக்க வேண்டும் என வேன்டுகோள் விடுப்பதுடன் கதவடைப்பு போராட்டத்திற்கு எமது பூரண ஆதரவை தெரிவித்துக் கொள்வதுடன் அனைவரும் இவ் கதவடைப்பு போரட்டத்திற்க்கு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.என குறிப்பிடப்பட்டுள்ளது.
காட்டாட்சி ஆகி விட்ட நல்லாட்சி வன்மையாக கண்டிக்கின்றோம் - மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம்.
Reviewed by NEWMANNAR
on
October 24, 2016
Rating:

No comments:
Post a Comment