அண்மைய செய்திகள்

recent
-

கடற்படை சிப்பாயிகள் மீது தாக்குதல்-கைது செய்யப்பட்ட முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த 6 பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு-Photos


முத்தரிப்புத்துறை கிராமத்தில் கடந்த 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு கடற்படை சிப்பாயிகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டார்கள் என்ற குறிறச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த கிராமத்தைச் சேர்ந்த 6 பேரையும் தொடர்ந்தும் எதிர்வரும் 27 ஆம் திகதி வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா இன்று திங்கட்கிழமை(24) உத்தரவிட்டார்.

முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த 6 சந்தேக நபர்களும் கடந்த 21 ஆம் திகதி சிலாபத்துறை பொலிஸார் ஊடாக மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது குறித்த 6 ஆபேரையும் இன்று(24) திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் கை;குமாறும், இன்றைய தினம் அடையாள அணிவகுப்பிற்கு உற்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த 6 சந்தேக நபர்களும் இன்று(24) திங்கட்கிழமை மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

எனினும் தாக்குதல்களுக்கு உள்ளான கடற்படை சிப்பாயிகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினம் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கவில்லை.

இந்த நிலையில் விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்;ஸ்ராஜா குறித்த 6 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறும்,அன்றைய தினம் அடையாள அணிவகுப்பிற்கு உற்படுத்தவும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் முத்தரிப்பு துறை கிராமத்தைச் சோர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் மன்னார் நீதிமன்றத்தை சூழ்ந்து கொண்டிருந்தனர்.

தரிப்புத்துறை கிராமத்தில் கடந்த 18 ஆம் திகதி இரவு வீடு ஒன்றினுள் செல்ல முற்பட்ட சந்தேக நபரை துரத்திப்பிடித்த கிராம மக்கள் குறித்த சந்தேக நபர் தாக்கியுள்ளனர்.

குறித்த நபர் கடற்படை சிப்பாயி என தெரிய வந்துள்ள நிலையில் கடற்படையினருக்கும் கிராம மக்களுக்கும் இடையில் முருகல் நிலை ஏற்பட்டது.

முத்தரிப்புத்துறை கிராம மக்களினால் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்ட கடற்படை சிப்பாயினை காப்பாற்ற சிவில் உடையில் சென்ற மற்றுமொரு கடற்படை சிப்பாயியும் மக்களினால் தாக்கப்பட்டார்.

தாக்குதல்களுக்கு உள்ளான இரு கடற்படை சிப்பாயிகளும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையிலே கடற்படை சிப்பாயிகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





கடற்படை சிப்பாயிகள் மீது தாக்குதல்-கைது செய்யப்பட்ட முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த 6 பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு-Photos Reviewed by NEWMANNAR on October 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.