உலகிலேயே அழகான ஹொட்டல் அமைந்துள்ள நகரம் எது தெரியுமா?
பிரித்தானிய நாட்டின் தலைநகரான லண்டன் நகரில் அமைந்துள்ள ஆடம்பர ஹொட்டல் ஒன்று உலகின் அழகான ஹொட்டல்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
லண்டன் நகரில் உள்ள King's Cross மற்றும் St. Pancras ஆகிய பகுதிகளுக்கு இடையில் அமைந்துள்ள German Gymnasium என்ற ஹொட்டல் தான் இந்த சிறப்பை பெற்றுள்ளது.
பிரித்தானிய நாட்டை சேர்ந்த Restaurant & Bar Design Awards என்ற அமைப்பு கடந்த 8 ஆண்டுகளாக உலகின் அழகான ஹொட்டல்களை தெரிவு செய்து வருகிறது.
2016ம் ஆண்டின் அழகான ஹொட்டல்களின் பட்டியலில் ’Best Overall Restaurant’ என்ற விருதை ஜேர்மன் ஜிம்னாசியம் ஹொட்டல் பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்த ஹொட்டலின் அமைப்பை Edward Gruning என்பவர் கடண்ட்க்ஹ 1864ம் ஆண்டு வடிவமைத்தார். இதற்கு பின்னர், இதே பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக பயன்படுத்தப்பட்டது.
இறுதியாக கடந்த 2015ம் ஆண்டு தான் இது ஒரு அழகான ஹொட்டலாக உருமாறியது.
நவீன மற்றும் ஆடம்பர வசதிகளை கொண்டு இந்த ஹொட்டலின் உட்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது தான் இந்த வெற்றிக்கு காரணமாக கூறப்படுகிறது.
தலைமை சமையல் கலை வல்லுனரான Bjoern Wassmuth என்பவரின் தலைமையில் உலகின் சிறந்த உணவு வகைகள் இந்த ஹொட்டலில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே அழகான ஹொட்டல் அமைந்துள்ள நகரம் எது தெரியுமா?
Reviewed by Author
on
October 11, 2016
Rating:

No comments:
Post a Comment