அண்மைய செய்திகள்

recent
-

எமது இனத்தின் எதிர்கால தூண்களாகிய பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்படத்தை வன்மையாக கண்டிக்கின்றேன்.-சாள்ஸ் நிர்மலநாதன்


எமது இனத்தின் எதிர்கால தூண்களாகிய பல்கலைக்கழக மாணவர்களின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலினால் நடராசா கஜன் மற்றும் பவுண்ராஜ் சுலக்ஷன் ஆகிய இரு மாணவர்கள் கொல்லப்படுள்ளனர்.மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் இருந்து கடற்படை,ராணுவம் வெளியேற வேண்டும் என நாம் போராட்டங்கள் நடத்திக்கொண்டு இருக்கும் தறுவாயில் தற்போது இரு உயிர்கள் இலங்கை பொலிசாரினால் காவுகொள்ளப்பட்டதை நான் வன்மையாக கண்டிப்பதோடு இச் சம்பவத்தில் தொடர்புபட்ட அனைத்து பொலிசாரும் தற்போது கைது செய்யப்படுள்ளதாகவும் இது குமராபுரத்தில் படுகொலைகுற்றம் புரிந்த ராணுவத்தினர் விடுதலை செய்யப்பட்டது போன்று இவர்களும் வரும் காலங்களில் விடுதலை செய்யப்படலாம்.அகவே இக் குற்றம் புரிந்த அனைத்து போலீசாருக்கும் தக்க தண்டனை வழங்கி கொடுக்க நாம் அனைவரும் பாடுபடுவோம். இதுவே இறந்த இம் மாணவசெல்வங்களுக்கு நாம்செய்யும் காணிக்கை.இப்படிப்பட்ட சம்பவங்களினால் தான் முன்பு தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதையும் இவ் அரசாங்கம் மறந்துவிடக்கூடாது.

பாராளுமன்ற உறுப்பினர்
சாள்ஸ் நிர்மலநாதன்


எமது இனத்தின் எதிர்கால தூண்களாகிய பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்படத்தை வன்மையாக கண்டிக்கின்றேன்.-சாள்ஸ் நிர்மலநாதன் Reviewed by NEWMANNAR on October 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.