அடம்பன் D.S காரியாலயத்தில் G.S களை நம்பி மக்கள் ஏமாற்றம்
மக்களுக்காக நியமிக்கப்பட்டிருக்கும் அரச ஊழியர்கள் பொறுப்புணர்ச்சியுடன் தமது கடமைகளை சரிவர நிறைவேற்றுவதில் பாரிய கடப்பாடு இருக்கின்றது. அரச சம்பளத்திற்காக கடமை புரியும் ஒருசிலரது பொறுப்பற்ற நடத்தைகளினால் ஒட்டுமொத்த அரச ஊழியர்களுக்கும் இழிப்பெயர் ஏற்படுவதும் உண்டு.
இத்தகைய பொறுப்பற்ற அரச ஊழியர்கள் தமது கடமைகளை உரிய நேரத்தில் சரிவர செய்யாத போது அரச காரியாலயங்களை நாடி வரும் பொதுமக்கள் கவலையுடனும் கண்ணீருடனும் பல ஏக்கங்களை உள்ளுக்குள் சுமந்த வண்ணம் மீண்டும் வீடு திரும்பவது யாவரும் அறிந்ததே.
இவ்வாறான ஓர் சம்பவம் இன்று 19-10-2016, புதன்கிழமை மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட அடம்பன் D.S காரியாலயத்தில் நடந்தேறியுள்ளது.
இன்று புதன்கிழமை என்பதால் தூரப் பிரதேசங்களிலிருந்து தேவையுடைய மக்கள் காலை 8 மணியிலிருந்து அலை மோதிக் கொண்டு (G.S) கிராம சேவகர்களைக் காணும் நோக்கில் பகல் 1:30 வரை தவம் கிடந்தும் G.S மார்கள் அங்கு வராததால் மக்கள் சொல்லொனாக் கவலையுடன் ஏமாற்றமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இன்று புதன்கிழமை என்று அவ்வதிகாரிக்குத் தெரிந்தும், தாம் மக்கள் சேவைக்காக நியமிக்கப்பட்டிருக்கிறோம் என்பதையும் மறந்து பொறுப்புணர்ச்சியற்று இவ்வாறு அலட்சியமாக நடந்துகொள்வது இவர்கள் அரச பணிக்கும், மக்களுக்கும் செய்யும் மகாப் பெரிய அநியாயமாகும் என்பது நன்றாக விளங்கிக்கொள்ள முடிகின்றது, உண்மையில் தமக்கு சொந்த வேலைகள் இருப்பின் காரியாலய மேல் அதிகாரிக்கு முன்னறிவிப்பு செய்து அதனை மக்கள் பார்க்கும் வகையில் அறிவிப்புப் பலகையில் பதிவிட்டிருக்கலாம். இதனை விடுத்து மக்கள் தம்மை நம்பி புதன் தோறும் வருவார்கள் என்று தெரிந்தும் பொடுபோக்காக நடப்பது G.S பணியை அவமதிக்கும் செயல் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
மேற்குறித்த சேவகர்களுக்கும், அத்தோடு இவ்வாறு பொறுப்பற்று நடக்கும் அத்தனை அரசு ஊழியர்களுக்கும் மேலதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்கள் ஏமாற்றப்படாமலிருக்க சிறந்தமுறையில் வழிவகுக்குமாறு இத்தால் பணிவன்புடன் வேண்டுகின்றோம்
நீதிக்காக போராடும்...
அ(z)ஸ்ஹான் ஹனீபா
மன்னார்

Reviewed by NEWMANNAR
on
October 19, 2016
Rating:

No comments:
Post a Comment