அன்று சென்னையில் சுவாதி, இன்று டெல்லியில் பிங்கி! தொடரும் பயங்கரம்....
டெல்லி குருகிராம் மெட்ரோ ரயில்நிலையத்தில், இன்று காலை 9.30 மணிக்கு, 22 வயதுப் பெண் ஒருவர் சரமாரியாக குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறும் போது,
அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர் பிங்கி. வேலைக்குச் செல்ல டெல்லி குருகிராம் மெட்ரோ ரயில் நிலையத்துக்குச் சென்றார்.
அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த ஜிதேந்தர் என்பவர், அவரைப் பல முறை கத்தியால் குத்தினார்.
பிங்கியை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்குள் உயிரிழந்து விட்டார்.
தப்பிக்க முயன்ற ஜிதேந்தரை பிடித்த பொதுமக்கள், காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
பிங்கி தாக்கப்படுவதற்கு சில நிமிடங்கள் முன்பு, தன் கணவரை செல்போனில் அழைத்து, ஜிதேந்தர் தன்னைப் பின் தொடர்ந்து வருவதாகக் கூறியது தெரிய வந்துள்ளது,என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆட்டோ ஓட்டுனரான ஜிதேந்தர், பிங்கியை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும் இதற்காக பலமுறை பிங்கியிடமும், அவரின் கணவரிடமும் சண்டையிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சில மாதங்கள் முன்பு நுங்கம்பாக்கத்தில் சுவாதி கொல்லப்பட்டுள்ளது போன்று தலைநகரில் பரபரப்பான ரயில் நிலையத்தில் பிங்கி கொல்லப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
- Vikatan-
அன்று சென்னையில் சுவாதி, இன்று டெல்லியில் பிங்கி! தொடரும் பயங்கரம்....
Reviewed by Author
on
October 25, 2016
Rating:

No comments:
Post a Comment