இலங்கைக்கு ஏற்படப் போகும் பேராபத்து! கடலில் மூழ்கப் போகும் யாழ்ப்பாணம்....
2040ம் ஆண்டளவில் இலங்கையின் சில பகுதிகள் கடலால் மூழ்கிப் போகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
சர்வதேசத்தின் அவதானத்திற்கு உள்ளாகியுள்ள காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொள்ளும் சர்வதேச ஆய்வுக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் ஆகிய நகரங்கள் அதிகளவில் பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சமகாலத்தில் பூமியில் ஏற்பட்டு வரும் அதிதீவிர உஷ்ணமாக காலநிலை காரணமாக, பனி மலைகள் வேகமாக உருகி வருகிறது. இதன்மூலம் கடலின் நீர் மட்டம் வழமையை விடவும் வேகமாக அதிகரித்து வருகிறது.
2025 இல் கடல் மட்டம் அரை மீற்றரினால் உயரும் எனவும், 2050, 2075 என கடல் மட்டத்தில் ஏற்படப்போகும் அதிகரிப்பு காரணமாக பாரிய சிக்கல் நிலை ஏற்படும் எனவும் IPCC (Intergovernmental Panel on Climate Change) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் அண்ணளவாக 40 சதவீதமான மக்கள் கரையோரங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான அனர்த்தம் காரணமாக அவர்களுக்கு ஆபத்துகள் ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், பலத்த காற்று காரணமாக கடலில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்கள் காரணமாக கடல் நீர் வேகமாக தரையை நோக்கி நகர்வதற்கான சூழல் உருவாகும் என கூறப்பட்டுள்ளது.
இந்த ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள தேவையான முன்நடவடிக்கைகள் துறைசார் தரப்பினர் மேற்கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கைக்கு ஏற்படப் போகும் பேராபத்து! கடலில் மூழ்கப் போகும் யாழ்ப்பாணம்....
Reviewed by Author
on
October 25, 2016
Rating:

No comments:
Post a Comment