மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு-மன்னார் நீதிமன்றத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம்.(படங்கள் )
நீதிபதி இளஞ்செழியன் மற்றும் கிளிநொச்சி நீதிபதி ஆனந்த ராஜா ஆகியோர் மீது அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிட்ட முகநூல் மற்றும் இணையத்தளங்களை கண்டித்து வடமாகாண சட்டதரணிகள் இன்று வியாழக்கிழமை பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகளும் இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காத நிலையில் நீதிபதி இளஞ்செழியன் மற்றும் கிளிநொச்சி நீதிபதி ஆனந்த ராஜா ஆகியோர் மீது அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிட்ட முகநூல் மற்றும் இணையத்தளங்கள் கண்டித்து பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
அண்மைக் காலமாக நீதிபதிகள் பற்றி தவறான செய்திகள் வெளியிடப்பட்டு வருவதாகவும் இது நீதிபதிகளை அவமதிக்கும் செயற்பாடுகள் எனவும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்ட மன்னார் நீதிமன்ற சட்டதரணிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மன்னார் நீதிமன்றத்திற்கு இன்று வியாழக்கிழமை வழக்கு விசாரனைகளுக்கு வந்த மக்கள் திரும்பிச் சென்றதோடு, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைக்காக இன்று வியாழக்கிழமை(20) அழைத்து வரப்பட்ட கைதிகள் மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-இன்றைய தினம் மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெற இருந்த சகல விதமான வழக்கு விசாரனைகளும் பிரிதொரு தினத்திற்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகளும் இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காத நிலையில் நீதிபதி இளஞ்செழியன் மற்றும் கிளிநொச்சி நீதிபதி ஆனந்த ராஜா ஆகியோர் மீது அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிட்ட முகநூல் மற்றும் இணையத்தளங்கள் கண்டித்து பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
அண்மைக் காலமாக நீதிபதிகள் பற்றி தவறான செய்திகள் வெளியிடப்பட்டு வருவதாகவும் இது நீதிபதிகளை அவமதிக்கும் செயற்பாடுகள் எனவும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்ட மன்னார் நீதிமன்ற சட்டதரணிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மன்னார் நீதிமன்றத்திற்கு இன்று வியாழக்கிழமை வழக்கு விசாரனைகளுக்கு வந்த மக்கள் திரும்பிச் சென்றதோடு, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைக்காக இன்று வியாழக்கிழமை(20) அழைத்து வரப்பட்ட கைதிகள் மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-இன்றைய தினம் மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெற இருந்த சகல விதமான வழக்கு விசாரனைகளும் பிரிதொரு தினத்திற்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு-மன்னார் நீதிமன்றத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம்.(படங்கள் )
Reviewed by NEWMANNAR
on
October 20, 2016
Rating:

No comments:
Post a Comment