யாழ்.மாணவர்கள் படுகொலையை கண்டித்து மட்டகளப்பில் பாரிய ஆர்ப்பாட்டம் !
பேனாவை தூக்கும் கைகளில் ஆயுதம் ஏந்த வைக்க வேண்டாம் என்ற கோசத்துடன் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு கல்லடி,சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கல்லடி,சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் முன்பாக இன்று காலை 10.30 மணியளவில் ஒன்று திரண்டு போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது மாணவர்களின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் “மறைமுக இன அழிப்பா?“ போன்ற பல்வேறு பதாகைகளை ஏந்தி படுகொலைக்கு எதிரான கோசங்களையும் எழுப்பியுள்ளனர்.
யாழில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் கொலை தொடர்பில் நீதியான விசாரணை நடைபெற வேண்டும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படவேண்டும் எனவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த கால யுத்தம் காரணமாக பெரும் வறுமையின் மத்தியில் கல்வியை தொடர்ந்து இன்று பல்கலைக்கழகம் வரை செல்லும் தமிழ் மாணவர்கள் மீது இவ்வாறான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.
திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உட்பட தமிழ் மாணவர்கள் கடத்தல் காணாமல்போதல் சம்பங்கள் என வடகிழக்கில் பல்வேறு சம்பங்கள் கடந்த காலத்தில் நடைபெற்றுள்ள நிலையில் இது வரையில் தமக்கான நீதி வழங்கப்படாத நிலையிலேயே இன்று இந்த மாணவர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
யாழ்.மாணவர்கள் படுகொலையை கண்டித்து மட்டகளப்பில் பாரிய ஆர்ப்பாட்டம் !
Reviewed by NEWMANNAR
on
October 24, 2016
Rating:

No comments:
Post a Comment