மாணவர்களின் படுகொலைக்கு நீதி கோரி கிளிநொச்சியில் பேரணி
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்தும் அவர்களுக்கு நீதி கோரியும் இன்று(24) கிளிநொச்சியில் பேரணி இடம்பெற்றது .
மேலும், கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இப்பேரணி, கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் இருந்து ஆரம்பித்ததுடன் பொலிஸ் அராஜகம் ஒழிக, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறும் பதாதைகளை தாங்கியவாறும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தைச் சென்றடைந்தது.
அங்கு மேலதிக அரசாங்க அதிபரிடம் கண்டன மனுவினை பேரணியில் கலந்து கொண்டோர் கையளித்தனர்.
இந்த பேரணியில், பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள், சிவில் பொது அமைப்புக்கள், வர்த்தகர்கள், கல்விச் சமூகத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிளை ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் படுகொலைக்கு நீதி கோரி கிளிநொச்சியில் பேரணி
Reviewed by NEWMANNAR
on
October 24, 2016
Rating:

No comments:
Post a Comment