பெரியமடு கிராம மக்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்தும் பாடுபடுவோம்- வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்-Photos
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரியமடு கிராமத்திலிருந்து வெளியேறிய முஸ்ஸீம் சமூகம் தற்போது நிலவும் நல்லாட்சியில் மீண்டும் தமது சொந்த கிராமத்திற்கு மீள்குடியேறி வருகின்றனர்.இவ்வாறு மீள் குடியேறிய மக்களுக்கு அமைச்சர் றிஸாட் பதியுதீன் பாரிய அபிவிருத்தி திட்டங்களை செய்து வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.
மாணவர்களின் கல்வி மற்றும் சுகாதாரம் போன்றவற்றை கருத்திற்கொண்டு மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரியமடு ம.வி பாடசாலைக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தளபாடம் மற்றும் ஒலிபெருக்கி போன்றவற்றை வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் இன்று வெள்ளிக்கிழமை(28) பாடசாலை அதிபரிடம் கையளித்தார்.
அதனைத்தொடர்ந்து அங்கு இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,,,,
பெரியமடு கிராமமானது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிராமமாகும்.
அன்று இக் கிராமத்திலிருந்து வெளியேறிய எமது முஸ்ஸீம் சமூகம் தற்போது நிலவும் நல்லாட்சியில் மீண்டும் இந்த கிராமத்திற்கு மீள்குடியேறி வருகின்றனர்.
இவ்வாறு மீள்குடியேறிய மக்களுக்கு அமைச்சர் றிஸாட் பதியுதீன் பாரிய அபிவிருத்தி திட்டங்களை செய்து வருகின்றார்.
அதே போன்று இன்று வடமாகாண சபை உறுப்பினராக இருக்கும் நானும் இப் பகுதியில் வாழுகின்ற மக்களுக்காகவும் இங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்காகவும் அவசியமான திட்டங்களை முன்னெடுத்து வருகின்றேன்.குறிப்பாக இக் கிராமத்தின் போடப்படும் வீதியாக இருந்தாலும் சரி, வீடுகளாக இருந்தாலும் சரி , வைத்தியசாலை கட்டிடமாக இருந்தாலும் சரி அது எம்மால் வழங்கப்பட்டது என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது.
அது மட்டுமன்றி புதிதாக குடியேறிய மக்கள் தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள கிணறுகள், குழாய் கிணறுகள் போன்றவற்றை வழங்கி வைத்துள்ளோம்.
மேலும் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் நோக்கோடு சுத்திகரிக்கப்பட்ட நீரை மக்களுக்கு வழங்கியுள்ளோம்.
காரணம் வீண் புகழாரத்திற்கோ அல்லது அரசியல் இலாபத்திற்கோ அல்ல.
இதுவரை எமது சமூகம் பட்ட துன்பங்கள் இனியும் படக்கூடாது என்பததே எமது நோக்கம்.
மேலும் இன்றய தினம் இப் பாடசாலைக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தாங்கி, தளபாடம் மற்றும் ஒலிபெருக்கி போன்றவற்றை வழங்குவதில் மகிழ்ச்சி மடைகின்றேன்.
மேலும் இந்த பாடசாலைக்கும் , மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் நிச்சயமாக செய்து தருவோம்.என தெரிவித்தார்.குறித்த நிகழ்வில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முஜாஹிர் , வலயக்கல்வி பாலர் பாடசாலை அதிகாரி , கிராம மக்கள்; இளைஞர் கழக பிரதி நிதிகள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பெரியமடு கிராம மக்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்தும் பாடுபடுவோம்- வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்-Photos
Reviewed by NEWMANNAR
on
October 28, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 28, 2016
Rating:












No comments:
Post a Comment