அண்மைய செய்திகள்

recent
-

பாலியல் தொழில் நிலையம் ஒன்றை நடத்திய குற்றச்சாட்டில்? மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதா விளக்கமறியலில்!


மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உட்பட 4 பேர் எதிர்வரும் 7 ஆம் திகித வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாலியல் தொழில் நிலையம் ஒன்றை நடத்திய குற்றச்சாட்டில் முன்னாள் மேயர் உட்பட 9 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.


சம்பவம் தொடர்பான வழக்கு இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, நீதவான் எம். கணேராஜா சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் அமைந்துள்ள முன்னாள் மேயரின் வீட்டில் இந்த பாலியல் தொழில் நிலையம் நடத்தப்பட்டு வந்ததுள்ளது.

தமக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மட்டக்களப்பு பொலிஸார் குறித்த வீட்டை நேற்று சோதனையிட்டனர்.

இதன் போது முன்னாள் மேயருடன் மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டதுடன் ஏனைய 5 பேர் நேற்று பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
பாலியல் தொழில் நிலையம் ஒன்றை நடத்திய குற்றச்சாட்டில்? மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதா விளக்கமறியலில்! Reviewed by NEWMANNAR on October 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.