பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்புக்கு நீதி கோரி வவுனியா வளாகத்தில் ஆர்ப்பாட்டம்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக மாணவர்கள் இன்று (24) காலை 10.00மணி முதல் 12.00மணிவரை வளாகத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சட்டப் பிரதிநிதிகளது முழுமையான பங்குபற்றுதலோடு பக்கச்சார்பற்ற விசாரணையை உறுதிப்படுத்த வேண்டும் , கொலையை விபத்தாக காட்ட முனைந்தமைக்கான பொலிசாரின் சட்டத்திற்கு முரணான முயற்சியை, தேசிய பொலிஸ் ஆணைக்குழு முழமையாக விசாரிக்க வேண்டும் , மனித உரிமை ஆணைக்குழு உள்ளுர், சர்வதேச மனித உரிமைகள் செயற்ப்பாட்டாளர்கள் இவ்வழக்கின் நீதி விசாரணையை முழுமையாக அவதானிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில் கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 11.30 அளவில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ்.பல்கலைக் கழகத்தில் கல்வி கற்ற மாணவர்களான 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஸன் மற்றும் 23 வயதான நடராசா கஜன் ஆகியோர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்புக்கு நீதி கோரி வவுனியா வளாகத்தில் ஆர்ப்பாட்டம்
Reviewed by NEWMANNAR
on
October 24, 2016
Rating:

No comments:
Post a Comment