அண்மைய செய்திகள்

recent
-

கடந்த அமைச்சரவையில் ரவுப் ஹக்கீமுக்கும், ரிசாத் பதியுதீனுக்கும் வாக்குவாதமா? நடந்தது என்ன?

கண்டி மாவட்டத்தில் பரம்பரை பரம்பரையாக பித்தளையிலான கலை பொருட்களை உற்பத்தி செய்து, அதன் மூலம்தங்களது ஜீவனோபாயத்தினை மேற்கொண்டு வரும் தொழிலார்களது வயிற்றில் அடிக்கும் விதமாக அமைச்சர் ரிசாத்
பதியுதீன் அவர்கள் தனது அமைச்சுக்குரிய அதிகாரத்தினை பயன்படுத்தி வருவதாகவும், தனது சகோதரர் மூலமாக இரண்டு

பித்தளை நிறுவனங்களை அமைத்து உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதாகவும்இத்தொழிலாளர்கள் முறையிட்டு வருகின்றார்கள்.

இது தொடர்பாக பித்தளை சிறுகைத்தொழில் சங்க உறுப்பினர்கள் மூன்று மாதங்களுக்கு முன்னர் கண்டி மாவாட்டபாராளுமன்ற உறுப்பினர் என்றவகையில் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் முறையிட்டனர், பின்னர் அமைச்சர் ரவுப் ஹக்கீம்அவர்கள் இதனை அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

பின்பு இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணும் பொருட்டு அமைச்சரவை குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அதில் அமைச்சர் ரவுப்ஹக்கீம் மற்றும் ரிசாத் பதியுதீன் உட்பட இன்னும் சில அமைச்சர்கள் அங்கம் வகிக்கின்றார்கள்.

அமைச்சரவை குழுமூலமாக பரம்பரை பரம்பரையாக செய்து வருகின்ற பித்தளை சிறுகைத் தொளிலாளர்களை நசுக்கி,அவர்களது வாழ்வாதாரத்தினை இல்லாதொழித்து தனது வியாபாரத்தினை மேலோங்க செய்யும் வகையில் சட்ட அங்கீகாரத்தினை பெறும் பொருட்டு அமைச்சரவை பத்திரத்தினை கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைகூட்டத்தில் அமைச்சர் ரிசாத்த பதியுதீனால் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.

அப்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பித்தளைசிறு கைத்தொழிலார்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை ஒவ்வொன்றாக அமைச்சரவையில் விபரித்துள்ளார்.

பித்தளை சிறுகைத்தொழில் விடயத்தில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் நடந்துகொள்ளும் முறைகேடுகளையும், அதனால் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார பிரச்சினைகளையும் கேள்வியுற்ற ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனா அவர்கள் தனது தலையில் இருகைகளையும் வைத்து அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். அத்துடன் அமைச்சரவையில் இருந்த ஏனைய

அமைச்சர்களும் ரிசாத் பதியுதீனை பார்த்து ஏளனமாக சிரிக்கின்ற அளவுக்கு நிலைமைகள் அங்கு காணப்பட்டது.பித்தளை உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் அசௌகரீகம் குறித்த அமைச்சர் ரவுப் ஹக்கீமின் கூற்றுக்கு பதிலளிக்க முடியாமல் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் கவனத்தை திசைதிருப்ப வேறு ஏதேதோ பேச முற்பட்டபோது ஜனாதிபதிஅவர்கள் இருவரையும் அமைதிப்படுத்தினார். உண்மை அவ்வாறு இருக்கும்போது ஒரு சில ஊடகங்கள் தங்களுக்குஏற்றாப்போல செய்திகளை பிரசுரித்துள்ளது.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

கடந்த அமைச்சரவையில் ரவுப் ஹக்கீமுக்கும், ரிசாத் பதியுதீனுக்கும் வாக்குவாதமா? நடந்தது என்ன? Reviewed by NEWMANNAR on October 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.