அண்மைய செய்திகள்

recent
-

துரையம்மா அன்பகத்தின் ஊடாக.....கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின்....

 23-10-2016 காலை 11-30 மணியளவில் இலண்டனில் இருந்து வருகை தந்த கிளிநொச்சி மாவட்ட  மக்கள் அமைப்பின் இலண்டன் பிரதிநிதியாக திருவாளர்.சக்தி அவர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றது.

எமது அன்பகத்தின் செயற்பாடுகளை நேரில் பார்வையிடுவதற்காக வந்தவரை சந்தன மாலையணிவித்து உறுப்பினர்கள் சகிதம் வரவேற்றதுடன் மௌன இறைவணக்கத்துடன் எமது கலந்துரையாடல் ஆரம்பமானது. எமது அமைப்பின் தலைவர் பிரதிநிதியவர்களை வரவேற்றதுடன் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் முலம்

எமது அன்பகத்திற்கு குழாய்க்கிணறு அடிப்பதற்கு 66000 ரூபாவும்
பாப்பாமோட்டை அன்பகவளாகத்தில் தற்காலிக அலுவலகம் அமைப்பதற்காக 100000 ஒரு இலட்சம் ரூபாவினையும் அத்தோடு வளாகத்தினை அழகுபடுத்துவதற்காக பயன் தரும் கன்றுகளையும் வழங்கியதோடு தனது செந்த நிதியில் இருந்து மின்கேற்றில் ஒன்றையும் வழங்கியதற்காகவும் அவருக்கும் அவரது அமைப்பிற்கும் எமது துரையம்மா அன்பகம் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

அத்தோடு நிவேதனம் அருட்சகோதரிகள் அலுவலகம் ஒன்றின் மேற்கூரை அமைப்பதற்கான 40000 ரூபா காசோலையினையும் பல மாற்றுத்திறனாளிகளை நேரில் சென்று பார்வையிட்டதுடன்அவர்களின் தேவைகளை தனது அமைப்பின் உயர்மட்டக்குழுவுடன் கலந்தாலோசித்து வழங்கு வதாகவும் மாற்றுத்திறனாளியான திரு.தேவா அவர்களுக்கு ரூபா 10000 கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் திருவாளர்.சக்தி அவர்கள் துரையம்மா அன்பகத்தின் ஊடாக வழங்கினார்.

துரையம்மா அன்பகமானது முதலும் திரு.தேவா அவர்களுக்கு 10000 ரூபாவினை வழங்கியுள்ளனர். அத்தோடு எமது பிரதான எண்ணத்தின் முதல் படியான முன்பள்ளி அமைப்பதற்கான நிதியினை தன்னிடம் இருந்தும் தனது அமைப்பு மற்றும் பிற அமைப்புகளிடம் இருந்து பெற்றுத்தருவதாகவும் தைமாதத்தில் முன்பள்ளிக்கான அடிக்கல் நாட்டுவதற்கு ஏதுவாக தனது செயற்பாடு அமையும் என்றும் பிரதிநிதி வாக்களித்தார்.
அத்தோடு நில்லாமல் எமது அன்பகத்தின் உறுப்பினராகவும் தன்னை இணைத்துக்கொண்டதோடு தன்னாலியன்ற உதவிகளை எப்போதும் செய்வேன் என உறுதியளித்தார்.





















துரையம்மா அன்பகத்தின் ஊடாக.....கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின்.... Reviewed by Author on October 29, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.