குடியேறிகளின் இறப்பு கடந்த ஆண்டை விட 1000 பேர் அதிகரிப்பு.....
கடந்த மூன்று நாள்களாக மத்திய தரைக் கடலில் 350க்கு மேலான குடியேறிகள் இறந்துள்ளதாக அல்லது காணாமல் போயுள்ளதாக சர்வதேச குடிவரவு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
லிபியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு வருவதற்கு கடல் கடந்து ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட பெரும்பாலான ஆப்ரிக்கர்கள்தான் சமீபத்திய இந்த முயற்சியில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியிலுள்ள சர்வதேச குடிவரவு நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் குறித்த விடயத்தினை தெரிவித்திருக்கிறார்.
இந்த சமீபத்திய புள்ளிவிவரம், இந்த ஆண்டு இதுவரை இறந்த அல்லது காணாமல்போன குடியேறிகளின் எண்ணிக்கையை 4600க்கும் மேலாக்கியிருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ஏற்பட்ட இறப்பை விட இந்த ஆண்டு 1000 பேர் அதிகமாக இறந்துள்ளனர்.
குடியேறிகளின் இறப்பு கடந்த ஆண்டை விட 1000 பேர் அதிகரிப்பு.....
Reviewed by Author
on
November 19, 2016
Rating:

No comments:
Post a Comment