32 ஈழத்து அகதிகள் மர்மமான முறையில் மாயம்..! தமிழக பொலிஸார் தீவிர விசாரணை....
தமிழகம் வேலுார் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்து 32 அகதிகள் காணாமல் போனமை குறித்து 'கியூ' பிரிவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, தமிழகம் வேலுார் மாவட்டத்தில், ஆறு இடங்களில் இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன.
குறித்த ஆறு முகாம்களிலும், 3,553 இலங்கை அகதிகள் தங்கியுள்ளனர். குறித்த அனைவருக்கும் குடியுரிமை சலுகை தவிர்ந்த ஏனைய அனைத்து சலுகைகளும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகள் வெளி இடங்களுக்கு செல்ல வேண்டுமாக இருந்னாதால், வருவாய் துறை அலுவலர்களிடம், அனுமதி பெற்றே செல்ல வேண்டும்.
இந்நிலையில், அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை வாரம் தோறும், வருவாய் துறையினர் கணக்கெடுத்து, பொலிஸாருக்கு அறிக்கை சமர்பித்து வருகின்றனர்.
எனினும், கடந்த வாரம் குறித்த ஆறு முகாம்களிலும் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் போது 32 இலங்கை அகதிகள் காணாமல் போயுள்ளமை குறித்த தகவல் வெளியானது.
மேலும், குறித்த அனைவரும் கடந்த இரண்டு மாதங்களாக காணாமல் போயுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் 'கியூ' பிரிவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் தமிழக வருவாய் துறையினர் கருத்து தெரிவிக்கையில், வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள், அங்கு நல்ல நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
இதையறிந்த, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிகள், தங்கள் உயிரை பணயம் வைத்து, வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதாக கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும், குறித்த 32 அகதிகள், மூன்று மாதங்களில் திரும்பி வந்துவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அவ்வாறு இல்லாது போனால் இலங்கை அகதிகள் பட்டியலில் இருந்து அவர்கள் பெயர் நீக்கப்படும்.
மேலும், அகதிகளுக்கு வழங்கப்படும் எவ்வித சலுகைகளும் அவர்களுக்கு வழங்கப்படாது. அத்துடன், குறித்த அனைவரும் மீண்டும் தமிழகத்தில் வசிக்க முடியாத நிலை ஏற்படும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
32 ஈழத்து அகதிகள் மர்மமான முறையில் மாயம்..! தமிழக பொலிஸார் தீவிர விசாரணை....
Reviewed by Author
on
November 19, 2016
Rating:

No comments:
Post a Comment