வடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற பிரித்தானியா, 1.2 மில்லியன் பவுண்டஸ் உதவி..!
இலங்கையின் நிலக்கண்ணிகளை அகற்ற மேலும் 1.2 மில்லியன் பவுண்ஸ்களை வழங்கும் திட்டத்தை பிரித்தானியா உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானியாவின் ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாயத்துக்கான அமைச்சர் பார்னெஸ் அனெலெ இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நிதி எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு வடக்குக்காக வழங்கப்படவுள்ளது.
கடந்த வருடம் மோல்டாவில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பிரித்தானியாவினால் அறிவிக்கப்பட்ட 6.6 மில்லியன் பவுண்ட்ஸ்களில் இது பகுதியாக வழங்கப்படுகிறது.
இந்த நிதி, கண்ணிவெடிகளை அகற்றும் ஹலோ ட்ரஸ்ட் அமைப்பின் ஊடாக வழங்கப்படவுள்ளது. இதேவேளை கிழக்கின் கண்ணிவெடியகற்றப்பட்ட இடங்களுக்கும் பிரித்தானிய அமைச்சர் விஜயம் மேற்கொண்டார்.
மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு கண்ணிவெடியகற்றும் பணிகள் முக்கியமானவை என்று குறிப்பிட்டுள்ள அவர், வடக்கில் குடும்ப சுமையை ஏற்றுள்ள பெண்களின் கஸ்டங்களையும் அவர்களுக்கு உரியவேலை வாய்ப்புக்கள் இன்மையையும் கண்டறிந்ததாக பிரித்தானிய அமைச்சர் குறிப்பிட்டார்.
வடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற பிரித்தானியா, 1.2 மில்லியன் பவுண்டஸ் உதவி..!
Reviewed by Author
on
November 08, 2016
Rating:

No comments:
Post a Comment