அண்மைய செய்திகள்

recent
-

வடக்கில் குற்றச் செயலில் ஈடுபடும் குழுக்கள் உள்ளன - விக்னேஸ்வரன்




வடக்கில் உள்ள சில குழுக்கள் சில குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டுள்ளதை தான் ஏற்றுக்கொள்வதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இதனை கூறியுள்ளார். ஆவா பற்றி அனைவரும் பேசுகின்றனர். எனினும் ஆவா குழு என்பது யார் என எவருக்கும் சரியாக தெரியாது.

இராணுவத்தினரே முதலில் ஆவா குழு எனக் கூறினர். இராணுவம் தான் இதனை தொடங்கியதாக தற்போது கூறுகின்றனர்.

இந்த குழுவை இராணுவமே நடத்தி வருவதாக கூறுகின்றனர். ஆனால், என்னால், இது குறித்து எதனையும் கூறமுயாது. விசாரணை நடத்தியே இது பற்றி கூறவேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதைகளை கூறுகின்றனர்.

சரியாக விசாரணை நடத்தாமல் இது பற்றி பேச முடியாது. ஆனால், சில குழுக்கள் தேவையற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. அவற்றை தடுத்து நிறுத்த முடியாத நிலைமையில் நாங்கள் இருக்கின்றோம். இதுதான் உண்மை.

2009 ஆம் ஆண்டு காலப் பகுதியில் வடக்கில் போதைப் பொருள்கள் பயன்படுத்தப்படவில்லை. அதற்கு பின்னர் தான் அதிகரித்துள்ளது இதுதான் எனது கேள்வி. இதனைவிட பாரதூரமான குற்றங்கள் நடக்கின்றன.

வடக்கில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இருக்கும் போது இந்த சம்பவங்கள் எப்படி நடக்கின்றன என்பதை எண்ணிப்பார்க்க முடியவில்லை.

இது எமக்கு அதிர்ச்சியை தருகிறது. ஆவா குழு பற்றி நீங்கள் கேட்கின்றீர்கள். அதற்கு பின்னால் யார் இருக்கின்றனர், யார் உதவுகின்றனர் என்பது எமக்கு தெரியாது எனவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கில் குற்றச் செயலில் ஈடுபடும் குழுக்கள் உள்ளன - விக்னேஸ்வரன் Reviewed by Author on November 08, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.