2017ஆண்டு பாதீட்டு...! வடக்கு தமிழ் தலைமைகளின் நிலைப்பாடு...
தேசிய அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத்திட்டம் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இன்று பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
பாதீட்டு தொடர்பில் அரச மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் தமது கருத்துக்களை இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சமர்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் தொடர்பில் இடம்பெறவுள்ள விவாதங்களை தொடர்ந்தே அதன் நன்மை மற்றும் தீமைகளை தெரிவிக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்தன், பாதீட்டு தொடர்பில் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, பாதீட்டில் பல அறிவிப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் பல விடயங்கள் உள்வாங்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், அரசாங்கம் பாதீட்டில் வெளியிட்டுள்ள அறிவிப்புக்களுக்கு தேவையான நிதியினை எவ்வாறு திரட்டப்போகின்றது என்பது கேள்விக்குறியாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2017ஆண்டு பாதீட்டு...! வடக்கு தமிழ் தலைமைகளின் நிலைப்பாடு...
Reviewed by Author
on
November 12, 2016
Rating:

No comments:
Post a Comment