அண்மைய செய்திகள்

recent
-

26 வயதில் 100 அறுவைசிகிச்சை செய்துகொண்ட அதிசய பெண்: வியக்க வைக்கும் காரணம்...


சுவீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல மொடல் அழகி ஒருவர் தன்னுடைய அழகை மெருகேற்றும் பொருட்டு நூறு அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர் Pixee Fox (26). இவர் தற்போது அமெரிக்காவின் North Carolina பகுதியில் வசித்து வருகிறார். எலக்டீரிசன் துறையில் மிகுந்த பயிற்சி பெற்றவரான இவர். அது தொடர்பான வேலைகளை செய்து வந்துள்ளார். அதன் பின்னர் தன் உடல் அழகின் மீது கவனம் செலுத்தியுள்ளார்.

அதைத் தொடர்ந்து மொடல் உலகிற்குள் கால் வைத்துள்ளார். மேலும் தன் உடலை கவர்ச்சி ஏற்ற வேண்டும் என்பதற்காக 10 வருடத்திற்குள் சுமார் 100 முறை அறுவைச் சிகிச்சை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.


தன் கண்களின் நிறத்தை அடிக்கடி மாற்றுவது, மார்பகத்தை கவர்ச்சிகரமாக இருக்கவேண்டும், உதடுகள் மற்றும் தன் இடை என உடலில் கிட்ட தட்ட பாதி பாகங்களை அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதில் 22 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளும் அடங்கும் என கூறப்படுகிறது.

இது குறித்து Pixee Fox கூறுகையில், தான் அடுத்த ஆண்டு(2017) இன்னும் 10 விதமான நடைமுறைகளை பின்பற்ற போவதாகவும், அதற்கான பயிற்சியை விரைவில் தொடங்கப்போவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் உலகின் மிகக் குறுகிய இடை தன்னுடைய இடையாகத்தான் இருக்க வேண்டும் என்றும் அதை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவைப்பதே தன்னுடைய குறிக்கோள் என கூறியுள்ளார்.

26 வயதில் 100 அறுவைசிகிச்சை செய்துகொண்ட அதிசய பெண்: வியக்க வைக்கும் காரணம்... Reviewed by Author on November 27, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.