200000 வாத்துகள் அழிப்பு: சிக்கலில் உலகின் இரண்டாவது விவசாய ஏற்றுமதி நாடு...
நெதர்லாந்தில் உள்ள 6 பறவைகள் வளர்ப்பகத்தில் உள்ள 190,000 வாத்துகளை அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல் காரணமாக அதிகாரிகள் அழித்துள்ளனர்.
வட ஐரோப்பாவில் வியாபித்துவரும் பறவை காய்ச்சலை கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் குறித்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக நெதர்லாந்து அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஐரோப்பியாவின் முக்கிய நாடுகளான ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க் மற்றும் ஜேர்மனியில் குறித்த பறவை காய்ச்சல் அதி தீவிரமாக வியாபித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பறவைகள் வளர்ப்பகத்தில் எந்த வகை தொற்று நோய் கண்டு பிடிக்கப்பட்டது என்பது குறித்த தகவலை அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.
பறவைகள் அழிக்கப்பட்ட 6 வளர்ப்பகங்களில் 4 எண்ணம் ஒரே நிறுவனத்தினருக்கு சொந்தமானது என தெரிய வந்துள்ளது.
நோய் தொற்றினை முதன் முறையாக கண்டறியப்பட்டுள்ள பகுதியின் ஒரு கி.மீ சுற்றுவட்டாரத்தில் குறித்த 6 வளர்ப்பகங்களும் அமைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உலகின் இரண்டாவது மிக பெரும் விவசாய ஏற்றுமதியை மேற்கொள்ளும் நாடு நெதர்லாந்து. இங்கு கோடிக்கணக்கில் கோழி, பன்றி, பசு மற்றும் ஆடுகள் ஆகியவற்றை குறித்த வளர்ப்பகங்களில் வளர்க்கப்பட்டு வருகின்றது.
நோய் தொற்று காரணமாக 1997 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 40 மில்லியன் பசு, கோழி பன்றி, ஆடுகள் என கொன்று குவித்துள்ளனர்.
200000 வாத்துகள் அழிப்பு: சிக்கலில் உலகின் இரண்டாவது விவசாய ஏற்றுமதி நாடு...
Reviewed by Author
on
November 27, 2016
Rating:
Reviewed by Author
on
November 27, 2016
Rating:


No comments:
Post a Comment