அண்மைய செய்திகள்

recent
-

உத்திரபிரதேசத்தில் கோர விபத்து: 63 பேர் பரிதாப பலி....


உத்திர பிரதேசத்தில் ரயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டதில் 63 பேர் உயிரிழந்துள்ளனர்.

கான்பூர் அருகே பாட்னா - இந்தூர் விரைவு ரயில் அதிகாலை 5 மணிக்கு ரயிலின் 14 பெட்டிகளும் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

தகவலறிந்த மீட்பு பணியினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்குண்டவர்களை மிட்டு வருகின்றனர்.

மேலும், சம்பவ இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைந்து மீ்ட்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டோருக்கு உதவி மீட்புக் குழுவும், மருத்துவ குழுவும் சம்பவ இத்திற்கு விரைந்துசென்று மீட்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மேலும் மீட்பு பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விபத்து குறித்து தகவல் அறிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கான்பூர்-05121072, புகாரயான்-05113-270239, ஜான்சி-05101072, ஓராய்-051621072 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தினால், ரயில் விபத்து எதிரொலியாக ஜான்சி லக்னோ, ஜான்சி கான்பூர் பயணிகள் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டுள்ள வழித்தடத்தில் வரும் ரயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

மேலும், விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இரங்கள் தெரிவித்துள்ளனர்.

உத்திரபிரதேசத்தில் கோர விபத்து: 63 பேர் பரிதாப பலி.... Reviewed by Author on November 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.