அண்மைய செய்திகள்

recent
-

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாட்டின் நிகழ்வுகள்...


இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முப்பது ஆண்டு நிறைவையயாட்டி ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் மாநாடு மற்றும் குருபூசை நிகழ்வுகள்  நேற்றையதினம் நல்லூர் துர்க்காதேவி மணி மண்டபத்தில் ஆரம்பமாகின.

ஆரம்பநாள் நிகழ்வு நேற்றுக்காலை 9 மணிக்கு நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள், யாழ்.பல்கலைக்கழக சமஸ் கிருதத்துறை தலைவர் பிரம்மஸ்ரீ ச.பத்மநாபன் முன்னிலையில் இடம்பெற்றது.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கெளரவ விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன், கல்வி பண்பாட்டலுவல்கள் விளை யாட்டுத்துறை இளைஞர்  விவகார அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன், சிறப்பு விருந்தினர்களாக நல்லூர் பிரதேச செயலாளர் ஆ.சிறி, யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் ந.தெய்வேந்திரராஜா, வண்ணை நாவலர் மகா வித்தியாலய அதிபர் சு.திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

மங்கல இசையுடன் காலை 9 மணிக்கு நல்லூர் நாவலர் மணி மண்டபத்தில் இருந்து ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் திருவுருவப்படம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு 9.25 மணிக்கு நூற்கண்காட்சி ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வுகள் தொடர்ந்து 4 நாட்களுக்கு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.    

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மாநாட்டின் நிகழ்வுகள்... Reviewed by Author on November 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.