டோனி ஸ்டைலில் போட்டியை முடித்த தரங்கா: கிண்ணம் வென்று அசத்தியது இலங்கை...
முத்தரப்பு ஒருநாள் தொடர் இறுதிப் போட்டியில் ஜிம்பாப்வே அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் இலங்கை- ஜிம்பாப்வே அணிகள் மோதியது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தொடக்க முதலே திணறி வந்த ஜிம்பாப்வே அணி 36.3 ஓவரிலே 160 ஓட்டங்களுக்கு சுருண்டது.
ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக மசகண்டா 36 ஓட்டங்களும், சீன் வில்லியம்ஸ் 35 ஓட்டங்களும் எடுத்தனர்.
இலங்கை அணி சார்பில், வந்தர்சே, குணரத்னே தலா 3 விக்கெட்டுகளும், சச்சித் பதிரான 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இதன் பின்னர் 161 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக தனஞ்ஜெய டி சில்வா, குஷால் பெரேரா ஆகியோர் களமிறங்கினர்.
தனஞ்ஜெய டி சில்வா டக்- அவுட்டாக ஆட்டமிழந்து ஏமாற்றினார். குஷால் பெரேராவும் (14), அடுத்து வந்த டிக்வெல்லவும் (16) நிலைக்கவில்லை.
இதனால் இலங்கை அணி நெருக்கடியான நிலையில் இருந்தது. இதன் பின்னர் ஜோடி சேர்ந்த குஷால் மெண்டிஸ், அணித்தலைவர் உபுல் தரங்கா ஆகியோர் நிதானமாக ஆடி அணியை மீட்டனர்.
குஷால் மெண்டிஸ் 57 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆடிய உபுல் தரங்காவும் அரைசதம் அடித்தார்.
இதனால் இலங்கை அணி 37.3 ஓவரிலே 4 விக்கெட் இழந்து 166 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அணித்தலைவர் உபுல் தரங்கா கடைசியில் விளாசிய ஒரு சிக்சருடன் 57 ஓட்டங்களுடனும், குணரத்னே 16 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஜிம்பாப்வே அணி சார்பில், பிரைன் விட்டோரி 3 விக்கெட் வீழ்த்தினார்.
டோனி ஸ்டைலில் போட்டியை முடித்த தரங்கா: கிண்ணம் வென்று அசத்தியது இலங்கை...
Reviewed by Author
on
November 28, 2016
Rating:
Reviewed by Author
on
November 28, 2016
Rating:


No comments:
Post a Comment