இலங்கையில் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள்..! எச்சரிக்கை விடுத்த றோ அமைப்பு...
இலங்கையில் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பில் இந்திய உளவுப் பிரிவான றோ எச்சரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் இலங்கைக்கு பயணம் செய்ய இந்திய வர்த்தகர் ஒருவர் உதவியதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும். ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் குறித்து இலங்கை பாராளுமன்றிலும் கருத்து வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள்..! எச்சரிக்கை விடுத்த றோ அமைப்பு...
Reviewed by Author
on
November 28, 2016
Rating:
Reviewed by Author
on
November 28, 2016
Rating:


No comments:
Post a Comment