அண்மைய செய்திகள்

recent
-

ஹிட்லர் தொடர்பில் தெரிந்திராத இரகசியங்கள்..!


உலக வரலாற்றையே நொடியில் மாற்றிய ஹிட்லரை அறியாதவர்கள் யாரும் இல்லை. ஆனால் ஹிட்லரின் முழுமையான வரலாறு தொடர்பில் அறிந்தவர்களும் யாரும் இல்லை என்றே கூற முடியும்.

வெள்ளைத் துணியில் உள்ள கறுப்புக் கரைகளே நம் கண்களை ஈர்க்கும். அதே போன்று, ஹிட்லரின் தவறுகளால், அவரை பற்றிய நினைவுகள் உலக சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட போது, அவரின் சாதனைகளும் கூடவே மறக்கப்பட்டுவிட்டன.

"ஹிட்லர் ஆட்சிக்கு வந்த நான்காவது ஆண்டில் ஏதாவது காரணத்தால் இறந்திருந்தால், உலகமே ஹிட்லரை "ஜேர்மனியின் சரித்திரத்தில் தோன்றிய மிகச் சிறந்த மாமனிதன் என்று பாராட்டியிருக்கும்!

" என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? அப்படி ஆட்சிக்கு வந்த முதல் 4 ஆண்டுகளில் ஹிட்லர் என்னதான் செய்திருப்பார்?

சர்வதிகாரிகளின் ஆட்சிக் காலத்தில் ஆபாச அத்துமீறல்கள் அதிகமாகவே இருக்கும். ஆனால் ஹிட்லர் அத்தகைய ஆபாசங்களை ஒருபோதும் அனுமதிக்கவில்லை. ஒரு விபச்சார விடுதி கூட அவரின் ஆட்சிக்காலத்தில் இல்லை என்பதே மிகப் பெரிய சாதனை

"விபச்சாரம் பிளேக் நோய் போன்றது. சிறிதும் தயவு காட்டாமல் அது அழிக்கப்பட வேண்டும். சமுதாயத்தின் அழுகிப் போன பகுதிகளை நாம் சுத்தப்படுத்த வேண்டும்.

இலக்கியம், சினிமா, கலை, பத்திரிக்கைகள், சுவரொட்டிகள், எதிலும் ஆபாசம் இருக்க, நான் அனுமதிக்க மாட்டேன்! என்று எச்சரித்தார் ஹிட்லர்.

முதல் உலகப்போரால் வாடி வதங்கி போயிருந்த ஜேர்மனியின் பொருளாதாரத்தை ஆட்சிக்கு வந்த மூன்றே ஆண்டுகளில் தூக்கி நிறுத்தியவர் ஹிட்லர். பதவியேற்ற 1933ல் ஜேர்மனியில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 60 லட்சம்.

ஆனால் 1936ஆம் ஆண்டில், அதாவது ஆட்சிக்கு வந்த மூன்றே ஆண்டுகளில், ஜேர்மனியில் வேலையில்லாதவர் என்று ஒருவர் கூட இல்லை என்ற நிலை உருவானது.

இத்தனைக்கும் பொருளாதார அறிவு சிறிதும் ஹிட்லருக்கு இல்லை. இந்த சாதனைக்கு காரணம், ஹிட்லரால் தேடிக் கண்டுப்பிடிக்கப்பட்ட ஜால்மர் ஷ்ஹாக்ட் என்ற பொருளாதார ஜீனியஸ் ஆவார்.

ஜால்மர் ஷ்ஹாக்ட் ஒன்றும் முன்னணித் தலைவரில்லை. ஆயினும் அவரது திறமையை உணர்ந்திருந்த ஹிட்லர் அவரை பொருளாதார அமைச்சராக நியமித்து இத்தகைய சாதனையை புரிந்தார்.

திறமைக்கு மரியாதை கொடுத்து பதவியை கொடுப்பவனே சிறந்த தலைவன். நமக்கு எப்போது இதேபோன்று இன்னொரு தலைவன் கிடைப்பான் என்று யூகிக்க கூட முடியவில்லை என ஹிட்லரை கொண்டாடி தீர்த்தார்கள் ஜேர்மனி மக்கள் .

ஹிட்லரின் ஆட்சியில் வேலைக்கேற்ற ஊதியம், போனஸ், விலைவாசி எல்லாம் கட்சிதமாக நிர்ணயிக்கப்பட்டது. படு வேகமாக வாகனங்கள் பயணிப்பதற்கு மிக நீண்ட அதிவேக வீதிகள் (highway) உலகில் முதலில் உருவாக்கப்பட்டது, ஜேர்மனியில் ஹிட்லரின் ஆட்சிக்காலத்தில்தான்.

முதியவர்களுக்கு பென்ஷன் மற்றும் இலவச வைத்தியம், எல்லோருக்கும் காப்புறுதி திட்டங்கள் எல்லாம் படுவேகமாக நடைமுறைக்கு வந்தன. சாமான்யர்களும் காரில் பயணிக்க வேண்டும்.


அவர்களுடைய பணவசதிக்கு ஏற்றவாறு கார்கள் தயாரிக்கப்பட வேண்டும். ஒரு கொள்கலன் பெட்ரோலுக்கு அது நாற்பது மைல் போக வேண்டும்" என்று Porsche கார் நிறுவனத்தின் அதிபர் 'பெர்டினான்ட் பொர்ஷ்' ஐ கூப்பிட்டு சொன்னார் ஹிட்லர்.

பின் பகுதியில் இஞ்சின் அமைப்புடன் தயாரிக்கப்பட்ட அந்த மினி கார்களுக்கு 'வோக்ஸ்வேகன்' என்று பெயரிடப்பட்டது. பிற்காலத்தில் அந்தக் கார்கள் உலகப் புகழ் பெற்றன.

தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் மாசு அடையக் கூடாது அன்று ஹிட்லர் சட்டம் கொண்டுவர, அத்தனை தொழிற்ச்சாலைகளும் அதற்கான Anti - Pollution சாதனங்களையும் பில்டர்களையும் பொருத்திக் கொண்டது.

அதனால் ஜேர்மனியில் ஓடிய நதிகள் அத்தனையும் படு சுத்தமாக இருந்தன. பல வலி நிவாரணிகளும், போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து வெளிவர உதவும் மருந்துகளும், ஹிட்லரின் கடும் முயற்சியால் கண்டுப் பிடிக்கப்பட்டன.

ஹைபோதேர்மியா என்னும் உடல் வெப்பத்தை குறைத்திடும் ஒரு நோயிற்கு தீர்வைக் கண்டது ஹிட்லரின் ஜேர்மனிய மருத்துவர்கள் தான். இவ்வாறு மருத்துவத்துறையில் வியத்தகு முன்னேற்றம் அடைந்தது ஜேர்மனி.

பெண்களுக்கு இராணுவத்தில் பலப் பணிகளில் இடம் தந்து, பெண்ணுரிமை காப்பதில் தலை சிறந்து விளங்கினார். பெண்களை எப்போதும் தாழ்வாக நினைத்தது இல்லை ஹிட்லர்.

இப்போதுள்ள மிருகவதை தடுப்பு சட்டத்தை அமல்படுத்துவதில் முன்னோடியாக திகழ்ந்தவர் ஹிட்லர். தன் தாயிடமும், மனைவியிடமும், குழந்தைகளிடமும் அன்புக் காட்டும் மனிதராக திகழ்ந்தார். குழந்தைகளுக்கு பிடித்த மனிதராக திகழ்ந்தார் ஹிட்லர்.

பல எதிரி நாடுகளை, கத்தியும் இன்றி, உயிர் சேதமும் இன்றி, தனது சமயோசிதப் புத்தியாலும், தந்திரத்தாலும் வெற்றிக் கொண்டவர் ஹிட்லர். அதற்கு அவரின் குறுக்கு புத்தியும், எதிரியை கணித்திடும் ஆற்றலும் பெரிதும் உதவி செய்தன.

ஹிட்லரின் காலத்தில் அவரின் பெரும் முயற்சியால் ஜேர்மனி இராணுவத் தொழில்நுட்பத்திலும் விஞ்ஞானத்திலும் மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்திருந்தது.

போரில் ஜேர்மனி தோல்வியடைந்த பின், ஜேர்மனியின் இராணுவத்தொழில்நுட்ப வல்லுனர்களையும், விஞ்ஞானிகளையும், அமெரிக்கர்களும் ரஷ்யர்களும் பங்குப் போட்டு பிரித்துக் கொண்டனர்.

அவர்களே இப்போதைய 'நாசா' வின் இத்தகைய வளர்ச்சிக்கு காரணமாக இருந்தனர் எனக் கூறினால் நம்ப முடிகிறதா?.

ஒரு தலைவனின் கடமை நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதும், வேலையில்லாமையை ஒழிப்பதும், இந்நாட்டை சேர்ந்தவன் நான் என்று பெருமிதமாக கூறிகொள்ளும் நிலைமையை உருவாக்குவதுவுமே ஆகும்.

ஹிட்லர் தனது ஆட்சிக் காலத்தில் அத்தகைய தலைவனாக திகழ்ந்தார் என்பதில் சந்தேகமே இல்லை. ஹிட்லர் காலத்தில் எந்த தொழிற்ச்சாலையிலும் சம்பளப் பிரச்னை, வேலைநிறுத்தம் என்பதெல்லாம் கிடையவே கிடையாது.

முதலாளி பக்கமும் அவர் சாயவில்லை. தொழிற்ச் சங்கங்களுக்கும் அவர் ஆதரவு தரவில்லை. முதலாளி பிரச்சினை செய்தாலும், தொழிலாளிகள் தவறு செய்தாலும், இரு தரப்பினரையும் சிறையில் தள்ளினார்.

இப்படிப்பட்ட ஆட்சியாளனைத்தான் நாம் தேடிக்கொண்டிருந்தோம் என புகழாரம் சூட்டி கௌரவித்தார்கள் ஜேர்மனியர்கள்.

ஆனால் காலம் கடந்து செல்கையில் ஹிட்லரின் வாழ்க்கைப்பயணமே திசைமாறிப்போனது . இருப்பினும் ஜேர்மனியின் மீது தன் உயிரையே வைத்திருந்தார் ஹிட்லர்.

போரில் பல்லாயிரக்கணக்கான யூத மக்களை ஹிட்லர் கொன்றொழித்ததற்கான காரணம் தன் தாய்நாட்டின் மீது அவர் கொண்ட முழுமையான அன்புதான் என்று இறுதிவரை யாரும் தெரிந்துக்கொள்ளவேயில்லை. சரித்திரத்தில் மரணித்தாலும் இன்றுவரை சரித்திரமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஹிட்லர்.

நிஜத்தில் மறைக்கப்பட்ட எத்தனையோ வரலாறுகளைப் போல ஹிட்லரின் வாழ்க்கையும் மறைக்கப்பட்டதால்தான் இறுதிவரையும் இவரின் உண்மையான வாழ்க்கைப் பின்னணியை உலகம் ஏற்றுக்கொள்ளவேயில்லை.


ஹிட்லர் தொடர்பில் தெரிந்திராத இரகசியங்கள்..! Reviewed by Author on November 19, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.