கணவர் அல்லாது வேறொரு ஆணுடன் பழகிய பெண்! மக்கள் முன் நிறைவேற்றப்பட்ட அதிரடி தண்டனை!
இந்தோனேஷியாவில் இஸ்லாமிய சட்டத்தை மீறிய குற்றத்திற்காக இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேருக்கு மக்கள் முன்னிலையில் வைத்து அதிரடி தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேஷியாவில் உள்ள 33 மாகாணங்களில் Aceh மாகாணத்தில் மட்டும் தான் இஸ்லாமிய சட்டம் அமலில் உள்ளது.
இந்நிலையில், குறித்த மாகாணத்தில் இஸ்லாமிய சட்டத்தை மீறி கணவர் அல்லாது வேறொரு ஆணுடன் பழகிய 34 வயது பெண்ணுக்கு பொது மக்கள் முன்நிலையில் கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணை மக்கள் முன்நிலையில் மூட்டி போட வைத்து கதற கதற 7 சவுக்கடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், திருமணத்திற்கு முன் உறவுக்கொண்ட 19 வயது பெண்ணிற்கு 100 சவுக்கடி தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.
இவர்களுடன் இஸ்லாமிய சட்டத்தை மீறிய மூன்று ஆண்களுக்கும் சவுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த மாகாணத்தில் திருமணமாகதவர்கள் வேறொருவருடன் தொடர்பு வைத்துக்கொள்வது, மது குடிப்பது, சூதாட்டம், ஒரே பாலின இடையே உறவுகள் தடை செய்யப்பட்டுள்ளது.
இதை மீறுபவர்களுக்கு இஸ்லாமிய சட்டப்படி கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கணவர் அல்லாது வேறொரு ஆணுடன் பழகிய பெண்! மக்கள் முன் நிறைவேற்றப்பட்ட அதிரடி தண்டனை!
Reviewed by Author
on
November 29, 2016
Rating:
Reviewed by Author
on
November 29, 2016
Rating:


No comments:
Post a Comment