அமெரிக்காவின் கடற்படையை திருகோணமலையில் நிலை நிறுத்த திட்டம் - இலங்கை அமெரிக்கா வசம் !
அமெரிக்காவின் இராணுவப்படையையும், கடற்படையையும் திருகோணமலையில் நிலைகொள்ள வைக்க திட்டம் தீட்டப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இன்று கொழும்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார்.
தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
அமெரிக்கா மெரைன்கோ திட்டம் ஒன்று உருவாக்கியுள்ளது அதேபோன்று இலங்கையும் ஒன்றினை அமைத்து இரு நாடுகளும் இணைந்து கடற்பாதுகாப்பினை அதிகரிக்கப்போகின்றது.
ஆனாலும் கடல் எல்லைப் பகுதியை பாதுகாக்கும் ஒரு திட்டத்தையே நாம் உருவாக்குகின்றோம் என அரசு தெரிவித்துள்ளது, எப்படியாயினும் இது மோசமானதாகும்.
அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பேரிலேயே இவை நடந்து வருகின்றது. தொடர்ந்து அமெரிக்காவின் கடற்கடை திருகோணமலையில் நிலை நிறுத்தப்படுவார்கள்.
மேலும் அமெரிக்காவின் யோசனைகளை நாம் கேட்கவேண்டிய அவசியம் இல்லை ஆனாலும் அமெரிக்காவின் அடிமைப்படுத்தலின் கீழேயே இலங்கை கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது இவற்றிக்கு காரணம் பிரதமர் ரணிலே.
பிரதமரின் கருத்துகளுக்கு அமைய இவை தெளிவாகின்றது எப்படியாயிலும் இலங்கை அமெரிக்கா வசமாகி வருகின்றது இந்த உண்மைகள் கூடிய விரைவில் வெளிவரும் எனவும் வாசுதேவ நாணயக்கார தெரித்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் கடற்படையை திருகோணமலையில் நிலை நிறுத்த திட்டம் - இலங்கை அமெரிக்கா வசம் !
Reviewed by Author
on
November 29, 2016
Rating:
Reviewed by Author
on
November 29, 2016
Rating:


No comments:
Post a Comment