அண்மைய செய்திகள்

recent
-

நடுவானில் கடலுக்குள் விழுந்த ஹெலிகொப்டர்! அனைவரும் பலியான சோகம்...


ஈரானில் மாரடைப்பு ஏற்பட்ட நபரை மருத்துவமனைக்கு ஹெலிகொப்டரில் அழைத்து சென்ற போது திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

ஈரானிலேயே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது, National Iranian Oil Company -ல் வேலை செய்து கொண்டிருந்த நபருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவரை ஹெலிகொப்டரில் ஏற்றிக் கொண்டு உடன் நால்வரும் சென்றுள்ளனர்.

அப்போது மசண்டாரன் கிழக்கு கடற்கரை நகரமான பெஹ்ஷாருக்கு காஸ்பியன் கடலில் சென்று கொண்டிருந்த போது திடீரென கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாகவும், அனைவரும் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருப்பு பெட்டி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள உள்ளூர் தொலைக்காட்சி, இந்த வருடத்தில் மசண்டாரன் நகரில் நடந்த இரண்டாவது ஹெலிகொப்டர் விபத்து என குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஹெலிகொப்டர் உட்பட விமானங்களை ஒழுங்காக பராமரிக்காததே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

நடுவானில் கடலுக்குள் விழுந்த ஹெலிகொப்டர்! அனைவரும் பலியான சோகம்... Reviewed by Author on November 28, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.