அண்மைய செய்திகள்

recent
-

கி.பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு உரிய விசாரணை வேண்டும்-கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் சி.ரவீந்திரநாத் காணாமல் ஆக்கப்பட்டு பத்து ஆண்டு நினைவை ஒட்டி இன்று (24) வியாழக்கிழமை கிழக்கு பல்கலைக்கழக பிரதான வாயிலில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கிழக்கு பல்கலைக்கழக சமூகம் ஒன்றிணைந்து நடாத்தியுள்ளனர்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் பல்கலைக்கழக உபவேந்தர் உட்பட பீடாதிபதிகள், துறைத்தலைவர்கள், பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன் போது பாதசாரிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கடந்த 2006.12.15 கொழும்பில் நடைபெற்ற சர்வதேச ஆய்வு மாநாட்டில் கலந்து கொண்டதன் பின்பு, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதி உயர்பாதுகாப்பு வலயமான கொழும்பில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதன்போது குறித்த உபவேந்தர் காணாமல் ஆக்கப்பட்டமைக்கான உரிய நீதியான விசாரணையை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு கிழக்கு பல்கலைக்கழக சமூகம் இணைந்து முன்னாள் உபவேந்தர் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு நீதியான விசாரணை வேண்டும் என குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை ஒழுங்குபடுத்தியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.


அத்தோடு இந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு பல்கலைக்கழக உபவேந்தர் பிரசன்னம் ஆகாத நிலையில் பிரதி உபவேந்தர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



கி.பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு உரிய விசாரணை வேண்டும்-கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம் Reviewed by NEWMANNAR on November 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.