அண்மைய செய்திகள்

recent
-

24 ஊடகவியலாளர்கள் கொலை : கொலையுடன் தொடர்புடையவர் சபையில் உள்ளார் : எம்.பி. அதிர்ச்சி தகவல்l

இலங்கை வரலாற்றில் முதலாவது ஊடகவியலாளர் படுகொலை 1981 ஆம் ஆண்டு பதிவானது. இதன்படி 1981 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் படுகொலையுடன் தொடர்புடைய பிரமுகர் தற்போதும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பதாக கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

முன்னைய ஆட்சிக்காலத்தின் போது 13 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டதாக ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்த தகவலை 24 பேர் படுகொலை செய்யப்பட்டதாகவும் ரம்புக்வெல்ல எம்.பி. திருத்தி வாசித்தார்.


பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் வெகுஜன ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சின் மீதான குழு நிலை விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

முன்னைய ஆட்சியின் போது 13 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்த கருத்து பிழையானது. முன்னைய ஆட்சிக்காலத்தின் போது 24 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். எனினும் இந்த எண்ணிக்கையில் பெருந்தொகையான தமிழ் ஊடகவியலாளர்கள். வடக்கில் யுத்தம் காரணமாகவே இந்த உயிரிழப்பு ஏற்பட்டது. ஐந்து ஊடகவியலாளர்கள் தெற்கில் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பில் விசாரணை நடைபெறுகின்றது.

ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பில் முன்னைய ஆட்சியின் மீது குற்றம் சுமத்துகின்றனர். ஆனால் இலங்கை வரலாற்றில் முதல் ஊடகவியலாளர் படுகொலை 1981 ஆம் ஆண்டிலேயே பதிவாகியது. விமல எஸ் சுரேந்திரகுமார் கொலை செய்யப்பட்டார். அக்கொலையை அப்போதைய பிரபல அமைச்சரே செய்தார். எனினும் அது விபத்து என மூடி மறைக்கப்பட்டது. காரணம் இந்த கொலையுடன் தொடர்புடையவர் தற்போதும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்பவர். எனினும் தண்டனை இல்லை.

இது போல முன்னைய ஆட்சிகளின் போது பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.1981 முதல் 1991 வரை 62 ஊடகவியலாளர்களும் 1994 முதல் 2005 வரை 37 ஊடகவியலாளர்களும் 2005 முதல் 2010 வரை 44 ஊடகவியலாளர்களும் படுகொலை செய்யப்பட்டனர்.

தகவல் அறியும் சட்ட மூலத்தில் விதிக்கப்பட்ட தடைகளை நீக்க வேண்டும். தகவல் பெறுவதற்காக அனைத்திற்கும் அனுமதி வழங்க வேண்டும்.
24 ஊடகவியலாளர்கள் கொலை : கொலையுடன் தொடர்புடையவர் சபையில் உள்ளார் : எம்.பி. அதிர்ச்சி தகவல்l Reviewed by NEWMANNAR on November 28, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.