விற்பனையாகின்றது வடபகுதி பொருளாதார வளங்கள்-எதிர்த்து நாளை மன்னாரில் எதிர்ப்பு போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு.- படம் இணைப்பு
வடபகுதியில் பிரதான வழங்களாக இருக்கின்ற 'மாந்தை சோல்ட் லிமிற்றெற்' கீழ் இருக்கின்ற மன்னார், ஆனையிறவு, குறிஞ்சாத்தீவு உப்பு உற்பத்தி கூட்டுஸ்தாபனங்களை தனியாருக்கு விற்பனை செய்ய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு எதிராக நாளை திங்கட்கிழமை(21) காலை 9.30 மணிக்கு மன்னாரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,
வடபகுதியில் பிரதான வழங்களாக இருக்கின்ற 'மாந்தை சோல்ட் லிமிற்றெற்' கீழ் இருக்கின்ற மன்னார், ஆனையிறவு, குறிஞ்சாத்தீவு உப்பு உற்பத்தி கூட்டுஸ்தாபனங்களை தனியாருக்கு விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
-அரசாங்கம் முன்னெடுத்துள்ள குறித்த நடவடிக்கைகளுக்கு எதிராக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் மன்னார் மாவட்டத்தில் நாளை (21) திங்கட்கிழமை பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது.
நாளை திங்கட்கிழமை காலை 10 மணிக்கு மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம் பெறவுள்ளது.குறித்த கூட்டத்திற்கு மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த நிலையில் இடம் பெறவுள்ள மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திற்கு முன்னர் மாவட்டச் செயலகத்திற்கு முன்னர் காலை 9.30 மணிக்கு பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட இருக்கின்றோம்.
மேலும் குறித்த பிரச்சினை தொடர்பாக உரிய தரப்பினரிடம் மகஜர் கையளித்து மக்களின் வாழ்வாதாரம்,உரிமை நிலைப்பாட்டை புறிந்து கொண்டு அரசாங்கம் குறித்த உப்பு உற்பத்தி கூட்டுஸ்தாபனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதை இடைநிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைத்து இந்த எதிர்ப்பு போராட்டத்தை இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கவுள்ளோம்.என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் மேலும் தெரிவித்தார்.
விற்பனையாகின்றது வடபகுதி பொருளாதார வளங்கள்-எதிர்த்து நாளை மன்னாரில் எதிர்ப்பு போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு.- படம் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
November 20, 2016
Rating:
No comments:
Post a Comment