கண்டி, அங்கும்புற துப்பாக்கிச்சூடு சம்பவம் ; சந்தேக நபர் அதிரடி கைது ; காணொளியும் வெளியானது
கண்டி, அங்கும்புற பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்ற பகுதியிலிருந்து சுமார் 4 கிலோ மீற்றர் தூரத்தில் வைத்து குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 30 வயதானவர் என்பதுடன் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து டி 56 ரக துப்பாக்கியொன்றும், 20 துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கி பிரயோக சம்பவத்துக்கு பயன்படுத்திய சிவப்பு நிற கார் ஒன்றை பூஜாபிட்டிய பகுதியில் வைத்து கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில் துப்பாக்கி பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருவதுடன், அதற்காக ஆறு பொலிஸ் குழுக்கள் செயற்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயங்காயத்துக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கண்டி, அங்கும்புற துப்பாக்கிச்சூடு சம்பவம் ; சந்தேக நபர் அதிரடி கைது ; காணொளியும் வெளியானது
Reviewed by NEWMANNAR
on
November 20, 2016
Rating:

No comments:
Post a Comment