தடைகளைத் தாண்டி முல்லைத்தீவில் மாவீரர்களுக்கு அஞ்சலி...
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் தினத்தை முன்னிட்டு இராணுவத்தினரின் அச்சுறுத்தல்களும் புலனாய்வு பிரவினரின் கண்காணிப்பும் இன்று மாலை அதிகமாக காணப்பட்டதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக புதுகுடியிருப்பு பிரதேச செயலகம் மற்றும் கரைத்துரைப்பற்று பிரதேச செயலகம் இவ்விரண்டு பிரதேசங்களில் அதிகளவான இராணுவ அச்சுறுத்தல்களும் புலனாய்வாளர்களின் கண்காணிப்பும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இரண்டு பிரதேசங்களில் வள்ளிபுனம், ஆனந்தபுரம், முள்ளிவாய்க்கால், முள்ளியவளை, அளம்பில், மணலாறு ஆகிய இடங்களில் துயிலுமில்லங்கள் காணப்படுகின்றன.
குறித்த துயிலுமில்லங்களில் இராணுவத்தினர் இருப்பது மட்டுமல்லாமல், வீடுகளில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு தடை ஏற்படுத்தியுள்ள நிலையில் தடைகளை தாண்டி பொதுமக்கள் அவர்களின் இல்லங்களில் அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தடைகளைத் தாண்டி முல்லைத்தீவில் மாவீரர்களுக்கு அஞ்சலி...
Reviewed by Author
on
November 27, 2016
Rating:
Reviewed by Author
on
November 27, 2016
Rating:


No comments:
Post a Comment