அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் உப்பளம் கைமாற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டால் மீனவர்களை ஒன்றினைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம். என்.எம்.ஆலம். எச்சரிக்கை -படம்

மன்னார் மாந்தை உப்பு உற்பத்தி கூட்டுஸ்தாபனம் தற்போது பாரிய அளவில் அபிவிருத்தியடைந்து வருகின்றது. சுமார் 60 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொகையினை செலவீனம் செய்து பாரிய உற்கட்டமைப்பு வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாரிய அளவில் அபிவிருத்தியடைந்து நல்ல வருமானத்தை ஈட்டித்தந்து கொண்டிருக்கும் மன்னார் உப்பளம் தனியாருக்கு அல்லது வெளிநாட்டவர்களுக்கு கைமற்றப்படுவதை மீனவ சமூகமாகிய நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என வடமாகாண கடற்தொழில் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.


மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்க சமாசத்தில் இன்று வெள்ளிக்கிழமை (25) காலை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,,

அன்றைய காலத்தில் அரசாங்க அதிபராக கடமையாற்றிய விஸ்வலிங்கம் அவர்களின் துனிவோடு சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான உப்பிற்கு அயடின் கலக்கின்ற இயந்திரத்தை மன்னார் மாவட்ட மீனவ சமாசம் மன்னார் உப்பளத்தில் பொறுத்தி இருந்தது.

அப்போது 2 ஆயிரம் மெற்றிக்தொன் உப்பு உற்பத்தியை உற்பத்தி செய்த நிலையில் தனது நிலைப்பாட்டில் இருந்து அரசிற்கு கையளித்ததன் பின்னர் மன்னார் உப்பளத்தில் இருந்து மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்க சமாசம் வெளியேறியது.

-இது ஒரு அரச நடவடிக்கையின் போது கையளிக்கப்பட்ட ஓர் விடையமாகும்.மன்னார் மாவட்ட மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டே அன்றைய அரச அதிபரினால் மன்னார் மாவட்ட உப்பளம் மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச்சங்க சமாசத்திடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இதன் போது குறித்த நிர்வாகம் சரியான முறையில் தமது உற்பத்திகளையும்,சேவைகளையும் முன்னனெடுத்த நிலையில் அரசிற்கு கைமாற்றப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மன்னார் உப்பளம் தொடர்பாக நாங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றோம்.

குறிப்பாக கடந்த வருடம் உப்பின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.ஒரு மூடை சுமார் 1600 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தற்போது குறித்த உப்பளம் வரவு செலவுத்திட்டத்தில் தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு உற்படுத்தப்பட்டுள்ளது.

தனியாருக்கு உப்பளத்தை விற்பனை செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு மன்னார் மாவட்ட மீனவ சமூகமாகிய நாங்கள் வண்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்ளுவதோடு, மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புக்கள்,சிவில் அமைப்புக்களும் தமது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

எனவே மன்னார் உப்பளம் தனியாருக்கு அல்லது ஏனைய வெளிநாடுகளுக்கு கையளிக்கப்படுவதை நாங்கள் வண்மையாக கண்டிக்கின்றோம்.

குறித்த உப்பளத்தின் வளர்ச்சியில் பங்களிகளாக இருந்தோம் என்ற வகையில் மாவட்ட மீனவர்களின் தேவைகள் அதிகம் உள்ளது.எனவே குறித்த உப்பளம் மன்னார் மாவட்ட மீனவர்களுக்கே சொந்தமானதாக உள்ளது என்பதனை தெரிவித்துக்கொள்ளுகின்றேன். எனவே எதிர்காலத்தில் உப்பளம் கைமாற்றப்படுவதை நாங்கள் விரும்பவில்லை.அதற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுப்போம் என தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,,,,

மன்னார் மாவட்டத்திற்கான புதிய கடற்தொழில் உதவிப்பணிப்பாளர் ஒருவர் கடந்த 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார்.

அவர் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களத்திற்கு வந்து தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார்.

எனினும் அவருடைய கடமை பொறுப்புக்களை நிறைவேறாததன் காரணத்தினால் ஏற்கனவே கடமையற்றிய உதவிப்பணிப்பாளரின் செயற்பாடுகள் தொடர்கின்றது.

மன்னார் மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட புதிய கடற்தொழில் உதவிப்பணிப்பாளர் பலரின் கோரிக்கைக்கு அமைவாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

புதிய கடற்தொழில் உதவிப்பணிப்பாளரின் வருகையினை மீனவ சங்கங்கள்,பிரதி நிதிகள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.

கடந்த காலங்களில் மீனவர்கள் படும் துன்பங்கள்,மீனவர்கள் ஏற்படுகின்ற பிரச்சினைகளை வெளியில் கொண்டு வந்த போதும் பாதீக்கப்பட்ட மீனவர்களுக்கு தீர்வைப்பெற்றுக்கொடுக்க கடமையாற்றிய கடற்தொழில் உதவிப்பணிப்பாளரின் பங்கு மிகவும் குறைவாக காணப்பட்டது.

அதனால் கடற்தொழிலில் சட்டவிரோதமான தொழில் முறைகள் அதிகரித்து காணப்பட்டது.

-இதற்கு எதிராக நாங்கள் பல தடவைகள் போராட்டங்களை முன்னெடுத்தோம்.

ஆனால் எமது முயற்சிகள் அனைத்தும் உதாசீனம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது புதிதாக ஒரு கடற்தொழில் உதவிப்பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய உதவிப்பணிப்பாளரின் நியமனத்தினூடாக மன்னார் மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

அவர் பெறுப்பேற்று மாவட்ட மீனவர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் உப்பளம் கைமாற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டால் மீனவர்களை ஒன்றினைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம். என்.எம்.ஆலம். எச்சரிக்கை -படம் Reviewed by NEWMANNAR on November 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.