இலங்கை த்ரில் வெற்றி..! காரணம் யார் தெரியுமா?
மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி த்ரில் வெற்றி பெற்றதற்கு யார் காரணம் என்பதை நிரோஷன் டிக்வெல்ல வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ஜிம்பாப்வே, மேற்கிந்திய தீவு, இலங்கை இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடர் நடந்து வருகிறது.
இந்த தொடரின் நேற்றைய போட்டியில் இலங்கை மேற்கிந்திய தீவுகள் அணியை ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இதன்மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது, இந்த போட்டியில் 94 ஓட்டங்கள் எடுத்து களத்திலும் சிறப்பாக செயல்பட்ட இலங்கை அணியின் விக்கெட் கீப்பரும், துடுப்பாட்டகாரருமான நிரோஷன் டிக்வெல்ல கூறியதாவது,
த்ரில் வெற்றிப்பெற்று இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற முக்கிய காரணமே அணியின் பந்து வீச்சாளர்கள் தான்.
பந்து வீச்சாளர்கள் எதிர் அணியினரை பதட்டமடைய செய்தனர். அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மிக சிறப்பாக செயல்பட்டனர். லக்மால், குலசேகர மற்றும் நுவான் பிரதீப் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.
ஆரம்பத்தில் அணி வீரர்கள் சில பந்துகளை பிடிக்க தவறவிட்டாலும், இறுதியில் பந்து வீச்சாளர்களின் சிறப்பான செயல்பாட்டின் மூலம் அணி 1 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது என தெரிவித்துள்ளார்.
இலங்கை த்ரில் வெற்றி..! காரணம் யார் தெரியுமா?
Reviewed by Author
on
November 25, 2016
Rating:

No comments:
Post a Comment