அண்மைய செய்திகள்

recent
-

யுத்தத்தில் எவரும் வெற்றி பெறவில்லை அழிவுகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன ஆளுநர் கூரே)


கடந்த 30 வருடகால யுத்தத்தில் எவரும் வெற்றி பெறவில்லை என தெரிவித்த வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, போரில் வெற்றி பெற்றது துன்பம் மற்றும் அழிவுகளே என குறிப்பிட்டுள்ளார்.
வலிகாமம் கல்வி வலயத்தின் சாதனையாளர் கௌரவிப்பு விழா நேற்று முற்பகல் ஒன்பது மணியளவில் சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த முப்பது வருட கால யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வெற்றிபெற வில்லை, அதே போன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் வெற்றி பெறவில்லை. துன்பம், அழிவுகள் தான் வெற்றிபெற்றுள்ளது.

அநியாயமாக பாடசாலை கட்டடங்கள் யுத்தத்தில் அழிவடைந்துள்ள. இந்த அழிவை மனிதர்களும் எதிர்நோக்கியுள்ளார்கள். யாழில் எழுக தமிழ் என்று சொல்லி ஒரு திட்டம் இருக்கிறது. அது நல்ல திட்டம். நல்லா படிக்க வேணும். நல்லா வேலை செய்து சம்பாதிக்க வேணும். அபிவிருத்தி வேலை செய்ய வேணும் இவற்றின் மூலமே எம்மால் திருப்பி எழ முடியும் என தெரிவித்தார் வடக்கு மாகாண ஆளுநநர்.

மேலும் யாழ்ப்பாணம் வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட 12 பாடசாலைகள் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இருக்கின்றன இதனை தற்போதைய நல்லாட்சி மாணவர்களின் நன்மைக்காகப் பெற்றுத்தரவேண்டும் என வலிகாமம் கல்விப்பணிப்பாளர் செ.சந்திரராஜா வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயிடம் இதன் போது கோரிக்கை விடுத்துள்ளார்.

எமது கல்வி வலயத்திலுள்ள 144 பாடசாலைகளில் தற்போது 2600 ஆசிரியர்களுடன், 101 அதிபர்கள் தலைமையில் இந்தப் பாடசாலைகள் இயங்கிவருகின்றன.
இதேவேளை, 12 பாடசாலைகளில் கல்வி கற்பதற்கான சூழலிருந்தாலும் அதற்கான அங்கீகாரம் இல்லை எனவே இதற்கான தகுந்த நடவடிக்கையினை எடுத்து மாணவர்களின் நலனுக்காகக் பாடசாலைகளை மீண்டும் பெற்றுத்தரவேண்டும்.

மாணவர்கள் தற்போது தூர இடங்களிலிருக்கின்ற பாடசாலைகளுக்குச் சென்று கல்வி கற்று வருகின்ற நிலைமை மிகவும் வருத்தத்தினைத் தருகின்றது. என தெரிவித்தார்.

யுத்தத்தில் எவரும் வெற்றி பெறவில்லை அழிவுகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன ஆளுநர் கூரே) Reviewed by Author on November 28, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.