அண்மைய செய்திகள்

recent
-

மலையக மக்களின் அவல வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டிய சிறிதரன் எம்.பி..!


200 ஆண்டுகளுக்கு மேல் உழைத்து இலங்கை என்ற நாட்டை அழகு படுத்திய மலையக மக்கள் தனக்கென சொந்த காணியேதும் இல்லாது இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இதனை பாராளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

மலையக தேசிய இனமும் தன்னுடைய வரலாற்று ரீதியான அடையாளங்களுடன் வாழ்வதற்கு பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றது.

எனினும், அவர்களது நிலையான வாழ்வுக்கான காணி இதுவரையிலும் வழங்கப்படாமல் தொடர்ந்தும் லயன் குடியிருப்புகளில் வாழ்ந்து வருகின்றனர். அதிலிருந்து விடுபட முடியாத நிலையில் அவர்கள் இருக்கின்றனர்.

உலகில் 620 ரூபா சம்பளம் பெற்றுக்கொள்ளும் ஒரு இனம் இருக்கின்றது என்றால் அது மலையக தோட்ட தொழிலாளர்களாகத்தான் இருக்க முடியும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, நாள்தோறும் 8 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் மலையகத்தில் தான் இருக்கின்றார்கள்.

எனவே, நாட்டுக்காக உழைக்கும் இந்த மலையக மக்களுக்கும் அவர்களது பிள்ளைகளது வாழ்க்கையில் மாற்றம் பெற வேண்டுமாயின் அவர்களுக்கு சொந்த நிலம் வேண்டும். சிறந்த போக்குவரத்து வேண்டும்.

சிறந்த வீட்டு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும். மலைய தொழிலாளர்களின் பிள்ளைகள் எதிர்காலத்தில் வல்லமை பொருந்தியவர்களாக மாறுவதற்கான ஆற்றல் வழங்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மலையக மக்களின் அவல வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டிய சிறிதரன் எம்.பி..! Reviewed by Author on November 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.