அண்மைய செய்திகள்

recent
-

டிரம்ப் வெற்றி பெறுவதற்காக 3 மாகாணங்களின் ஓட்டு இயந்திரங்கள் ஹேக்கிங்? வெளியான அதிர்ச்சி தகவல்


அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் கிளிண்டன் வெற்றி பெறுவார் என்று கூறப்பட்ட மூன்று முக்கிய மாகாணங்களின் ஓட்டு இயந்திரங்கள் ஹெக் செய்திருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஹிலாரி கிளிண்டன் தான் தேர்வு செய்யப்படுவார் என்ற பலரும் எதிர்பார்த்த நிலையில், குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். இது அமெரிக்க மக்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஹிலாரி வெற்றி பெறுவார் என்று கூறப்பட்ட Wisconsin, Michigan, மற்றும் Pennsylvania ஆகிய மாகாணங்களில் ஓட்டு இயந்திரங்கள் ஹெக் செய்திருக்கலாம் என பிரபல கணினி துறை பேராசிரியர் அலெக்ஸ் ஹால்டர்மென் கூறியுள்ளார்.


அதில் அமெரிக்க தேர்தலில் ஒவ்வொரு மாகாணங்களிலும் ஒவ்வொரு முறையில் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் ஓட்டு சீட்டு முறை, இயந்திர முறை, மின்னஞ்சல் முறையில் ஓட்டுப்போடுதல் என உள்ளது.

இதில் ஹிலாரி வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட Wisconsin, Michigan, மற்றும் Pennsylvania ஆகிய மாகாணங்கள் கம்ப்யூட்டர் உதவியுடன் செயல்பட்ட ஓட்டு இயந்திர முறை பயன்படுத்தப்பட்டது. இந்த மாகாணங்களில் ஹிலாரி தோல்வியை சந்தித்தார்.

இதனால் அந்த ஓட்டு இயந்திரங்களை ஹேக்கிங் முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தகவல்களை மாற்றி முறைகேடு செய்திருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த மூன்று மாகாணங்களிலும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனவும் தவறு நடந்துள்ளதா என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று ஹிலாரி ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

டிரம்ப் வெற்றி பெறுவதற்காக 3 மாகாணங்களின் ஓட்டு இயந்திரங்கள் ஹேக்கிங்? வெளியான அதிர்ச்சி தகவல் Reviewed by Author on November 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.