சிவப்பு நிறத்தில் நாளை பெரிய நிலா 70 ஆண்டுக்கு பின் அதிசயம்
பூமியில் இருந்து 3.84 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலா, அதன் நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. பெரிய அளவில் ஏற்படும்போது 48ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நில பூமிக்கு அருகில் வந்து செல்லும். அதனாலேயே இந்த அதிசய நிகழ்வின்போது நிலா சற்று பெரியதாகவும், கூடுதல் ஒளியுடனும் காணப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த 1948ல் இதுபோல் பெரியதாக நிலவு தோன்றியதாகவும், அதன்பின்னர் நாளை மீண்டும் தோன்ற உள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
அந்த சமயத்தில் நிலா எப்படி இருக்கும் என்ற படத்தையும் நாசா வெளியிட்டுள்ளது. வானம் தெளிவாக இருக்கும் பட்சத்தில் வெறும் கண்களாலேயே பெரிய நிலவை பார்க்கலாம். தொலைநோக்கி மூலமாகவும் பார்த்து ரசிக்கலாம். அதிக ஒளியுடன் இருப்பதால் நிலா சிவப்பு நிறத்தில் தெரியும். நாளை பார்க்க முடியாவிட்டால் டிசம்பர் 14ம் தேதி மீண்டும் இதேபோல் பெரிய நிலா தோன்றும் அதிசய நிகழ்ச்சி நடக்க உள்ளது என நாசா தெரிவித்துள்ளது.
சிவப்பு நிறத்தில் நாளை பெரிய நிலா 70 ஆண்டுக்கு பின் அதிசயம்
Reviewed by NEWMANNAR
on
November 14, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 14, 2016
Rating:


No comments:
Post a Comment