ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் அவசர சந்திப்பு - பின்னணி என்ன..?
எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைபின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன்,
தற்போது வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் நாளாந்த வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.
TNA leader R. Sampanthan Interview
குறிப்பாக காணி தொடர்பான பிரச்சினை, அரசியல் கைதிகள் பிரச்சினை, அபிவிருத்தி தொடர்பான பிரச்சினை மற்றும் வடக்கு கிழக்கில் நிலை கொண்டுள்ள இராணுவம் தொடர்பான பிரச்சினை தொடர்பில் பேசியுள்ளோம்.
இவ்வாறு இராணுவம் நிலைகொண்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினை மற்றும் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு தெளிவு படுத்தியுள்ளோம்.
மேலும், இந்த விடயங்கள் தொடர்பில் விரைவில் பிரதமரையும் சந்திக்கவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புதிய அரசியலமைப்பு குறித்தும் இந்த சந்திப்பின் போது பேசப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் அவசர சந்திப்பு - பின்னணி என்ன..?
Reviewed by Author
on
November 25, 2016
Rating:

No comments:
Post a Comment