ஹிலாரி கிளிண்டனுக்கு கிடைத்த நற்செய்தி: ஆட்சியை பிடிப்பதற்கான அறிகுறியா?
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வரும் ஹிலாரி கிளிண்டன் எதிர்கொண்ட ஒரு முக்கிய பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சராக பணியாற்றியபோது தன்னுடைய சொந்த மின்னஞ்சலை பயன்படுத்தி அதிக முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை பகிர்ந்துக்கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதன் அடிப்படையில் கடந்த யூலை மாதம் ஹிலாரி மீதான விசாரணை தொடங்கியது. எனினும், அவர் குற்றமற்றவர் என புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஹிலாரி தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், 8 நாட்களுக்கு முன்னர் ஹிலாரியின் மின்னஞ்சல் விவகாரம் மீண்டும் பூதாகரமாக கிளம்பியுள்ளது.
இது தொடர்பாக ஹிலாரி மீது வழக்கு பதிவு செய்யவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.
மேலும், இவ்விவகாரம் தேர்தலில் ஹிலாரிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில், புலனாய்வு துறை இயக்குனரான James Comey நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘ஹிலாரி மீது எவ்வித குற்றமும் இல்லை என்றும், அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை’ என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
புலனாய்வு துறையின் இந்த அறிவிப்பு ஹிலாரி கிளிண்டனை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இது ஆட்சியை கைப்பற்ற உதவும் எனவும் அவர் கணித்துள்ளார்.
ஹிலாரிக்கு ஆதரவாக அறிவிப்பு வெளியிட்டுள்ள புலனாய்வு துறை இயக்குனரை டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
‘சட்டவிரோதமாக ஹிலாரி 6,50,000 மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளார். இவ்வளவு மின்னஞ்சல்களையும் புலனாய்வு துறை வெறும் 8 நாட்களில் ஆய்வு செய்து விட்டதா?
ஹிலாரி கிளிண்டனுக்கு அரசு அதிகாரிகள் வெளிப்படையாக ஆதரவு அளித்து ஒரு வட்டத்திற்குள் பாதுகாப்பாக வைத்துள்ளார்கள்’ என டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
ஹிலாரி கிளிண்டனுக்கு கிடைத்த நற்செய்தி: ஆட்சியை பிடிப்பதற்கான அறிகுறியா?
Reviewed by Author
on
November 07, 2016
Rating:

No comments:
Post a Comment